தமிழகத்தில் நாளை (செப்டம்பர் 13) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

0

பொதுமக்களின் மின்சார பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில், மின் பராமரிப்பு பணிகள் தவறாமல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சென்னையில் நாளை (செப்டம்பர் 13) மின் பராமரிப்பு பணி காரணமாக சில மணி நேரம் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

மின்தடை:

தமிழகத்தில் மின் வாரியம் சார்பில் மாதந்தோறும், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடந்து வருகிறது. இந்த மின் பராமரிப்பு பணி நடைபெறும் போது மின் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புக்காக சில மணி நேரம் மின் விநியோகம் நிறுத்தப்பட்டு மின்தடை ஏற்படும்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த மின்தடை குறித்த அறிக்கை முன்னதாக மின்வாரிய செயற்பொறியாளர்களுக்கு தெரிவிக்கப்படும். இந்த வகையில் சென்னையில் (13.09.2022) நாளை மயிலாப்பூர் பகுதியில் மின்வாரிய பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் நாளை காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மயிலாப்பூரில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

மேலும் மின் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் பிற்பகல் 2.00 மணிக்குள் மின் விநியோகம் அளிக்கப்படும் என்று மின்சார வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் சென்னையில் மயிலாப்பூர் பகுதியில், ஆழ்வார்பேட்டை க.எண் 29 முதல் 42, டிடிகே ரோடு, சி.ஐ.டி காலனி 2வது மெயின் ரோடு, சி.ஐ.டி காலனி 5வது மற்றும் 6வது குறுக்கு தெரு ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மின்சார வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here