ரயில் பயணிகள் கவனத்திற்கு – இனி இதை தெரிஞ்சுக்காம Train-ல ஏறாதீங்க! மீறினால் அபராதம் தான்!!

0

ரயிலில்  பயணம் மேற்கொள்ளும், பயணிகள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கிய விதிமுறை குறித்த  அறிவிப்பு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய அறிவிப்பு:

நாட்டில் பெரும்பாலோனோர், அதிக தூரம் பயணம் செய்வதற்கு தேர்ந்தெடுக்கும் முக்கிய சேவைகளில் ஒன்று ரயில். இதில் பயணம் செய்ய, பெரும்பாலானோர் ஆன்லைன் புக்கிங் செய்து கொண்டாலும், ஆன்லைன் வசதி தெரியாதவர்கள் இன்னும் டிக்கெட் கவுண்டர்களை பயன்படுத்துகின்றனர்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

அப்படி, கவுண்டர்களில் எடுக்கப்படும் டிக்கெட் தொலைந்து விட்டால் உங்களால் தொடர்ந்து ரயிலில் பயணம் செய்ய முடியுமா? ரயில்வே சட்ட விதிகளின்படி, உங்கள் டிக்கெட் தொலைந்தாலும் உங்களால் நிச்சயம் பயணம் செய்ய முடியும்.

அதற்கு ஒரே வழி, நீங்கள் ரயில் புறப்படுவதற்கு முன்  டூப்ளிகேட் டிக்கெட் பெற வேண்டும். நீங்கள் ஸ்லீப்பர் மற்றும் 2ம் வகுப்பு பயண டிக்கட்டை தொலைத்து விட்டால், கூடுதலாக ரூ. 50 ம், பிற வகுப்புகளுக்கு கூடுதலாக ரூ. 100ம் செலுத்தி உங்கள் காண போன டிக்கெட்டின் கட்டணத்தில் 50% தொகையை செலுத்தி டூப்ளிகேட் டிக்கெட் பெறலாம்.

அப்படி ஒரு வேளை, உங்கள் காண போன டிக்கெட் கிடைத்து விட்டால்  ரயில் கிளம்புவதற்கு முன் , இரண்டு டிக்கெட்டுகளையும் கவுண்டரில் செலுத்தி, நீங்கள் செலுத்திய கட்டணத்தில் இருந்து 5% பணத்தை மட்டும் திரும்ப பெற்றுக் கொள்ளலாம். ரயிலில் பயணம் செய்யும்போது ஒரு வேளை உங்கள் டிக்கெட் தொலைந்தால், நிச்சயம் இந்த வழிமுறைகள் உங்களுக்கு கை கொடுக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here