
தொடர் மழை காரணமாக சுருளி அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சுருளி
தமிழகத்தில் எப்போதும் சித்திரை மாதம் கோடை வெயில் சுட்டெரித்த நிலையில் இந்த ஆண்டு வழக்கத்தை விட மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் தமிழகத்தில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுகிறது. மேலும் தேனி மாவட்டம் கம்பம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மழை கொட்டி தீர்த்து வருகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்த தொடர் மழையால் அங்குள்ள நீர் நிலைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாத்தலமான சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழக TNUSRB SI போட்டி தேர்வர்கள் கவனத்திற்கு.., உங்களுக்காகவே வெளியான சூப்பர் அறிவிப்பு!!
சுருளி அருவியில் குளிக்க தடை விதித்ததால் கோடை விடுமுறையை உற்சாகமாகக் கழிக்க வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். மேலும் நீர்வரத்து சீராகும் வரை பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் யாரும் அருவிக்கு செல்ல கூடாது என்று வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.