+2வில் முதலிடம் பெற்ற மாணவிக்கு அடித்த ஜாக்பாட் – தமிழக முதல்வர் கொடுத்த சர்ப்ரைஸ்!!

0
+2வில் முதலிடம் பெற்ற மாணவிக்கு அடித்த ஜாக்பாட் - தமிழக முதல்வர் கொடுத்த சர்ப்ரைஸ்!!
+2வில் முதலிடம் பெற்ற மாணவிக்கு அடித்த ஜாக்பாட் - தமிழக முதல்வர் கொடுத்த சர்ப்ரைஸ்!!

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள், கடந்த ஏப்ரல் 3ம் தேதி முடிவடைந்த நிலையில், இதன் தொடர்ச்சியாக விடைத்தாள் திருத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்றது. இந்த பணிகள் அனைத்தும் சமீபத்தில் முடிவடைந்ததை அடுத்து, நேற்று (மே 8) 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் முடிவுகள் வெளியாகின.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த தேர்வு முடிவில், மாநில முழுவதும் உள்ள மாணவர்களின் தேர்ச்சி விகிதமானது, 94.03 சதவீதமாக பதிவாகியுள்ளது. இதில், மாணவிகள் 96.38%-மும், மாணவர்கள் 91.45% தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த 12ம் வகுப்பு பொதுத் தேர்வில், அனைத்து (6) பாடங்களிலும் 100க்கு 100 என, முழு மதிப்பெண் (600/600) பெற்று திண்டுக்கல், அண்ணாமலையார் மில்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற மாணவி நந்தினி, வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

சுற்றுலா பயணிகளுக்கு ஷாக்கிங் நியூஸ் .., சுருளி அருவியில் குளிக்க தடை.., வனத்துறையினர் எச்சரிக்கை!!!

மாநில அளவில் முதலிடம் பெற்ற இந்த மாணவியை, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் அழைத்து, இனிப்புகளை வழங்கி பாராட்டி உள்ளார். இதனை தொடர்ந்து, மாணவி நந்தினியின் உயர்கல்விக்கான செலவுகளை அரசே ஏற்கும் எனவும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மாணவி நந்தினியை கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ், அமைச்சர் ஐ.பெரியசாமி உள்ளிட்ட பலரும் வாழ்த்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here