ரோஜா சீரியலுக்கே விபூதி அடித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் – முதல் இடத்தில் எந்த சீரியல் தெரியுமா??

0

இல்லத்தரசிகளின் பெரும் பொழுதுபோக்காக அமைவது சீரியல்கள் தான். தற்போது டாப் லிஸ்ட்டில் உள்ள சீரியல்கள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதுவும் சன் டிவியின் முன்னணி சீரியலை பாண்டியன் ஸ்டோர்ஸ் பின்னுக்கு தள்ளி சாதனை படைத்துள்ளது.

டாப் சீரியல்

சன் டிவியில் ஆரம்பித்து விஜய் டிவி வரை தொடர்ந்து பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. ஒவ்வொரு நாளும் சீரியலுக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. ஏனெனில் படங்கள் எதுவும் அவ்வளவாக ஓடாததால் சீரியலுக்கு தான் ரசிகர்கள் அதிகம் முக்கியத்துவம் அளித்து வருகின்றனர்.

பாரதி கண்ணம்மா இன்றைய எபிசோட் ரிவ்யூ!!!
பாரதி கண்ணம்மா இன்றைய எபிசோட் ரிவ்யூ!!!

மேலும் கண்ணான கண்ணே, சுந்தரி, பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ், ரோஜா என பல சீரியல்களில் ட்விஸ்டுகளை வெளியிட மக்கள் எதை பார்ப்பது என்றே திணறி போயிருந்தனர். இதனால் சீரியல் ரேட்டிங் அனைத்தும் எகிறியது என்றே சொல்லலாம்.

மேலும் சீரியல்களுக்கிடையே போட்டியும் வலுவானது. ஆனால் எப்பொழுதுமே பாரதி கண்ணம்மா தான் முன்னிலையில் இருக்கும். மேலும் ரோஜா சீரியல் தான் பாரதி கண்ணம்மாவிற்கு பெரிய போட்டியே. இந்நிலையில் இந்த வாரத்திற்கான டாப் சீரியல் லிஸ்ட் வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய எபிசொட் ப்ரோமா வீடியோ!!!

முதல் இடத்தில் பாரதி கண்ணம்மாவும், இரண்டாவது இடத்தில் இந்த தடவை பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலும், மூன்றாவது இடத்தில் ரோஜா சீரியலும் நான்காவது இடத்தில் பாக்கியலட்சுமியும் இடம் பெற்றுள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் பாரதி கண்ணம்மாவிற்கே டஃப் கொடுக்கும் வகையில் 2வது இடத்தை பிடித்துள்ளது. மேலும் ரோஜா சீரியலை பின்னுக்கு தள்ளியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here