பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு.., இன்று இந்த சேவை செயல்படாது.., கோவில் நிர்வாகம் அறிவிப்பு!!

0
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றாக விளங்கி வரும் கோவில் தான் பழனி முருகன் கோவில். இந்த கோவிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இப்படி தமிழ் கடவுள் முருகனை தரிசிக்க வரும் பக்தர்கள்  மலை அடிவாரத்தில் இருந்து கோவிலுக்கு செல்ல பெரும்பாலானோர் படிப்பாதை வழியாக தான் செல்கின்றனர்.
இது ஒரு பக்கம் இருக்க சில பக்தர்கள் மலை ஏற முடியாமல் ரோப் கார், மின் இழுவை ரயில் உள்ளிட்டவைகளில் செல்கின்றனர். குறிப்பாக நடந்து செல்லும் போது கிடைக்காத இயற்கை அழகு இந்த இரண்டில் சென்றால் கிடைக்கிறது என்பதற்காகவே பெரும்பாலான பக்தர்களின்  முதல் தேர்வாக ரோப் கார் இருந்து வருகிறது. அப்பேற்பட்ட அந்த ரோப் கார் வருடாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இன்று  ரோப் காரில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இன்று ஒரு நாள் மட்டும் ரோப் கார் செயல்படாது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here