இன்றைய பெட்ரோல் & டீசல் விலை…மாதத்தின் முதல் நாளே இப்படி ஒரு விலை ஏற்றமா???

0

சென்னையில் இன்று (ஜூன் 1, 2021) பெட்ரோல் லிட்டர் 23 காசுகள் உயர்ந்து 95.99 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது. டீசல் விலை 22 காசுகள் உயர்ந்து 90.12 ரூபாய் என விற்பனையாகி வருகிறது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கொரோனா ஊரடங்கால் இந்தியாவில் பொருளாதார நடவடிக்கைகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவால் பெட்ரோல், டீசல் விற்பனையும் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை விலையை உயர்த்தி வருகின்றன. கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே தான் செல்கிறது.

 

இந்நிலையில் சென்னையில் பெட்ரோல் விலை நேற்றைய விலையிலிருந்து 23 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.95.99 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் டீசல் விலையும் நேற்றைய விலையிலிருந்து 22 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.90.12 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து கொண்டிருந்தாலும் விலை உயர்ந்து கொண்டே தான் உள்ளது. இதுவரை பெட்ரோல் மட்டுமே 90 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வந்தது. இன்று முதல் டீசல் விலையும் 90 ஐ விட அதிகமாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here