கொரோனா தொற்று கட்டுக்குள் வருகிறதா?? ஒரே நாளில் 2,55,287 பேர் டிஸ்சார்ஜ்!!

0

நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. தற்போது இதுவரை நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முதல் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை வரை என அனைத்தையும் வெளியிட்டுள்ளது சுகாதார அமைச்சகம்.

கொரோனா:

கொரோனா இரண்டாம் அலை பரவ துவங்கிய நேரத்தில் நோயினால் பாதிக்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் நோய் பாதிப்பிற்குள்ளாகி இறந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்த நிலையில் தற்போது குறைய துவங்கியுள்ளது. நோய் பரவலை கட்டுக்குள் கொண்டு வர மத்திய மற்றும் மாநில அரசி கடுமையான முயற்சிகளின் அடிப்படையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பொது மக்கள் கூட்டமாக கூடுவது தவிர்க்கப்பட்டது. இதனால் நோய்த்தொற்று பரவும் விகிதம் கட்டுக்குள் வந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,27,510 ஆகவும், நோய்த்தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 2,55,287 ஆகவும், மேலும் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,795 எனவும் பதிவாகியுள்ளது. மேலும் இதுவரை இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,81,75,044 எனவும், நோய்த்தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 2,59,47,629 மற்றும் இறந்தவர்களின் எண்ணிக்கை 3,31,895 எனவும் பதிவாகியுள்ளது. மேலும் தடுப்பூசி போட்டுகொண்டவர்களின் எண்ணிக்கை 21,60,46,638 எனவும் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here