மீண்டும் குறைந்தது தங்கத்தின் விலை – பொதுமக்கள் மகிழ்ச்சி!!

1
Gold
Gold

தமிழகத்தில் நாள்தோறும் ஏற்ற, இறக்கத்தில் இருந்து வந்த தங்கத்தின் விலை இன்று குறைந்து உள்ளது பொதுமக்களை நிம்மதி அடைய வைத்துள்ளது. ஆனால் வரும் நாட்களில் விலை உயரவே அதிக வாய்ப்புகள் உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.

இன்றைய விலை:

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ், பிற நாடுகளுக்கு வேகமாக பரவத் தொடங்கியது. இதனால் போக்குவரத்து, ஏற்றுமதி, இறக்குமதி உட்பட பல்வேறு தொழில்துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதன் விளைவாக அனைத்து பங்குகளும் சரிந்ததால் முதலீட்டாளர்கள் தங்கம் போன்ற பாதுகாப்பான முதலீடுகள் பக்கம் கவனத்தை செலுத்தினர். தங்கத்தின் தேவை இதனால் பன்மடங்கு உயர்ந்தது. இதனால் இதுவரை இல்லாத அளவு விலையும் அதிகரித்தது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

Gold Purchase
Gold Purchase

ஆகஸ்ட் மாத மத்தியில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 43 ஆயிரம் ரூபாயை தாண்டியது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் பொருளாதார மந்த நிலை நீடிப்பதால் வரும் நாட்களிலும் விலை உயர வாய்ப்பு உள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது.

விஜய் பட இயக்குனர் பாபு சிவன் திடீர் மரணம் – அதிர்ச்சியில் திரையுலகம்!!

இன்று சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 காரட்) 38 ரூபாய் குறைந்து ரூ.4,909க்கும், ஒரு சவரன் ரூ.304 குறைந்து ரூ.39,272க்கும் விற்பனை ஆகிறது. வெள்ளியின் விலையும் சற்று குறைந்து ஒரு கிராம் ரூ.69.80 ஆக உள்ளது.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here