TNPSC குரூப் 4 தேர்வர்களே…, 2014 & 2018 ல் கேட்கப்பட்ட முக்கிய பொது தமிழ் வினாக்கள்…, விடை அளியுங்கள் பார்ப்போம்!!

0
2014 & 2018 ல் கேட்கப்பட்ட முக்கிய பொது தமிழ் வினாக்கள்
2014 & 2018 ல் கேட்கப்பட்ட முக்கிய பொது தமிழ் வினாக்கள்

TNPSC யின் குரூப் 4 தேர்வுக்காக தேர்வர்கள் அனைவரும் படு தீவிரமாக தற்போது தயாராகி வருகின்றனர். இத்தகைய தேர்வர்களுக்கு சிறந்த பயன் அளிக்கும் வகையில், 2014 மற்றும் 2018 ஆம் ஆண்டிற்கான குரூப் 4 தேர்வில் கேட்கப்பட்ட முக்கியமான பொது தமிழ் வினாக்களும், அதற்கான விடைகளையும் தொகுக்கப்பட்டு கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1. ‘அவன் உழவன்’ – என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.

(A) தெரிநிலை வினைமுற்று

(B) குறிப்பு வினைமுற்று

(C) பெயர்ச்சொல்

(D) தொழிற்பெயர்

2.  “சூழியல் வின்சோன்” பாராட்டிய தமிழறிஞர்

(A) திரு.வி.க.

(B) மறைமலையடிகள்

(C) உ.வே.சா.

(D) கவிமணி

3. பெயர்ச்சொல்லின் வகையறிதல் : நடிகன்

(A) பொருட்பெயர்

(B) பண்புப்பெயர்

(C) தொழிற்பெயர்

(D) காலப்பெயர்

4. பொன்னியிடம் தேன்மொழி தான் மறுநாள் மதுரைக்குச் செல்வதாகக் கூறினாள் – எவ்வகைத் தொடர்?

(A) நேர்க்கூற்று

(B) அயற்கூற்று

(C) எதிர்மறை கூற்று

(D) கலவைத் தொடர்

5. தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை வேரில்லாத மரம்; கூடில்லாத பறவை – என்று பாடியவர் யார்?

(A) பாவேந்தர் பாரதிதாசன்

(B) உமர் கய்யாம்

(C) இரசூல் கம்ச தோவ்

(D) க. வைரமுத்து

6. “நோய்க்கு மருந்து இலக்கியம்’ என்று கூறியவரை தேர்வு செய்க

(A) உ. வே. சாமிநாதர்

(B) மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்

(C) பரிதிமாற் கலைஞர்

(D) மறைமலை அடிகளார்

7. பேரறிஞர் அண்ணாவிற்கு விருப்பமான இலக்கியம்

(A) கலிங்கத்துப்பரணி

(B) திருக்குறள்

(C) கம்பராமாயணம்

(D) பரிபாடல்

8. பொருந்தாத சொல்லை தேர்வு செய்க

(A) பெறா அ

(B) தழீஇ

(C) அண்ணன்

(D) கொடுப்பதூஉம்

9. யாப்பு என்றால்’ என்பது பொருள்

(A) அடித்தல்

(B) சிதைத்தல்

(C) கட்டுதல்

(D) துவைத்தல்

10.  ‘அங்கவியல்’ திருக்குறளில் எந்தப் பகுப்பில் இடம்பெற்றுள்ளது?

(A) அறத்துப்பால்

(B) பொருட்பால்

(C) காமத்துப்பால்

(D) எதுவுமில்லை

11. இங்கிலாந்து மகாராணி விக்டோரியா காலையில் கண் விழித்ததும் முதலில் படித்த நூல்

(A) திருவருட்பா

(B) திருக்குறள்

(C) மகாபாரதம்

(D) ராமாயணம்

12. “என்காற் சிலம்பு மணியுடை அரியே”

இவ்வடிகளில் ‘மணி’ என்பது எதனைக் குறிக்கும் என்பதைத் தெரிவு செய்க.

(A) பவளம்

(B) முத்து

(C) மாணிக்கம்

(D) மரகதம்

இவ்வாறு TNPSC தேர்வில் கேட்கப்பட்ட முக்கியமான வினாக்களையும், அது தொடர்பான கூடுதல் வினாக்களையும் தினசரி நடப்பு நிகழ்வுகளையும், தொகுத்து அனுப்பமுள்ள ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் பிரபல Examsdaily நிறுவனம் வழங்கி வருகிறது. ரூ. 7500 மதிப்பிலான இந்த பயிற்சி வகுப்புகளை தேர்வர்கள் சிறந்த முறையில் பயன்படுத்தி கொண்டு, தேர்வில் வெற்றி பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தேர்வுக்கு தயாராகுங்கள்.

TNPSC GROUP 4 ONLINE COURSE APPLY NOW  
விடைகள்:
1. (B) குறிப்பு வினைமுற்று
2. (C) உ.வே.சா.
3. (C) தொழிற்பெயர்
4. (B) அயற்கூற்று
5. (C) இரசூல் கம்ச தோவ்
6. (B) மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்
7. (A) கலிங்கத்துப்பரணி
8. (C) அண்ணன்
9. (C) கட்டுதல்
10. (B) பொருட்பால்
11. (B) திருக்குறள்
12. (C) மாணிக்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here