TNPSC குரூப் 4 தேர்வர்களே…, 2013 ல் கேட்கப்பட்ட முக்கிய பொது தமிழ் வினாக்கள்…, யூஸ் பண்ணிக்கோங்க!!

0
TNPSC குரூப் 4 தேர்வர்களே..., 2013 ல் கேட்கப்பட்ட முக்கிய பொது தமிழ் வினாக்கள்..., யூஸ் பண்ணிக்கோங்க!!
TNPSC குரூப் 4 தேர்வர்களே..., 2013 ல் கேட்கப்பட்ட முக்கிய பொது தமிழ் வினாக்கள்..., யூஸ் பண்ணிக்கோங்க!!

TNPSC தேர்வாணையம் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டதை அடுத்து, தேர்வர்கள் தீவிரமாக தயாராக தொடங்கி விட்டனர். இவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் வகையில், 2013 ஆம் ஆண்டிற்கான குரூப் 4 தேர்வில் கேட்கப்பட்ட முக்கியமான பொது தமிழ் வினாக்களும், அதன் விடைகளும் தொகுக்கப்பட்டு கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1. பெயர்ச்சொல்லின் வகையறிதல்:

‘ஆதிரையான்’ என்ற பெயர்ச்சொல்லின் வகையறிக.

(A) பண்புப்பெயர்

(B) தொழிற்பெயர்

(C) காலப்பெயர்

(D) குணப் பெயர்

2. தன்வினை வாக்கியத்தைக் கண்டறிக.

(A) இலக்கியா புத்தாடை அணிவித்தாள்

(B) இலக்கியா புத்தாடை அணிந்தாள்.

(C) புத்தாடை இலக்கியாவால் அணிவிக்கப்பட்டது

(D) இலக்கியா புத்தாடை அணியாள்

3. உலகம் என்ற தமிழ்ச் சொல்லின் வேர்ச்சொல் எது?

(A) உலகு

(B) உலவு

(C) உளது

(D) உளம்

4. ஞானப்பச்சிலை எனப் போற்றப்படும் மூலிகை

(A) துளசி

(B)கீழாநெல்லி

(C) தூதுவளை

(D) கற்றாழை

5. பரணி இலக்கியத்திற்குரிய பாவகையைக் குறிப்பிடுக.

(A) வெண்பா

(B) விருத்தப்பா

(C) கலி விருத்தம்

(D) கலித்தாழிசை

6. உரிய விடையைத் தேர்க :

அகராதி என்னும் சொல்லை முதன் முதலாக கையாண்டவர் யார்?

(A) திருமூலர்

(B) வீரமாமுனிவர்

(C) திருநாவுக்கரசர்

(D) கம்பர்

7. உரிய விடையைத் தேர்க:

திருக்குறளை நாற்பதாண்டுகள் படித்துச் சுவைத்த போப். அதனை ஆங்கிலத்தில் எந்த ஆண்டு மொழிபெயர்த்து வெளியிட்டார்?

(A) 1786

(B) 1858

(C) 1808

(D) 1886

8. ‘வளன்’ என்ற சொல்லால் குறிக்கப்படுவர் யார்?

(A) தாவீது

(B) கோலியாத்து

(C) சூசையப்பர்

(D) சவுல் மன்னன்

9. தொண்டுக்கு முந்து, தலைமைக்குப் பிந்து எனக் கூறியவர்

(A) காந்தியடிகள்

(B) பேரறிஞர் அண்ணா

(C) மு.வரதராசனார்

(D) பெரியார்

10. அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்தல்.

(A) வீண், வீழ்ச்சி, வீடு, வீதி

(B) வீடு, வீண், வீதி, வீழ்ச்சி

(C) வீழ்ச்சி, வீண், வீதி, வீடு

(D) வீழ்ச்சி, வீடு, வீதி வீண்

11. சரஸ்வதி என்று சித்தர்கள் எதனைக் குறிப்பிடுகின்றனர்?

(A) காசினிக் கீரை

(B) வல்லாரைக் கீரை

(C) பசலைக்கீரை

(D) அகத்திக் கீரை

12. ‘மருகி’ என்பது யாரைக் குறிக்கும்?

(A) மருமகள்

(B) மகள்

(C) கொழுந்தி

(D) மாமியார்

இவ்வாறு TNPSC தேர்வில் கேட்கப்பட்ட முக்கியமான வினாக்களையும், இது தொடர்பான கூடுதல் தகவல்களையும் சேர்ந்து, பிரபல Examsdaily நிறுவனம் அனுப்பமுள்ள ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. தேர்வர்கள் ரூ. 7500 மதிப்பிலான இத்தகைய பயிற்சி வகுப்புகளை சிறந்த முறையில் பயன்படுத்தி கொண்டு, தேர்வில் வெற்றி பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தேர்வுக்கு தயாராகுங்கள். அல்லது கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பயிற்சி வகுப்பில் இணையலாம்.

TNPSC GROUP 4 ONLINE COURSE APPLY NOW

மேலும் விவரங்களுக்கு

Call us at 8101234234

[ninja_form id=2]

விடைகள்:
1. (C) காலப்பெயர்
2. (B) இலக்கியா புத்தாடை அணிந்தாள்.
3. (B) உலவு
4. (C) தூதுவளை
5. (D) கலித்தாழிசை
6. (A) திருமூலர்
7. (D) 1886
8. (C) சூசையப்பர்
9. (C) மு.வரதராசனார்
10. (B) வீடு, வீண், வீதி, வீழ்ச்சி
11. (B) வல்லாரைக் கீரை
12. (A) மருமகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here