TNPSC அறிவிப்பால் வெடித்த சர்ச்சை., Group 1 தேர்வு எழுத புதிய கட்டுப்பாடு! தேர்வர்கள் அச்சம்!!

0
TNPSC அறிவிப்பால் வெடித்த சர்ச்சை., Group 1 தேர்வு எழுத புதிய கட்டுப்பாடு! தேர்வர்கள் அச்சம்!!
TNPSC அறிவிப்பால் வெடித்த சர்ச்சை., Group 1 தேர்வு எழுத புதிய கட்டுப்பாடு! தேர்வர்கள் அச்சம்!!

TNPSC தேர்வாணையம் நடத்தும் குரூப்-1 தேர்வில், கல்வித்துறைக்கான டிஇஓ பணியிடங்களுக்கான அறிவிப்பில் உள்ள சில கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தேர்வர்கள் கோரிக்கை :

அரசு துறைகளில் ஏற்படும் காலி பணியிடங்களை நிரப்ப, TNPSC போட்டி தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் கல்வி துறையில் ஏற்பட்டுள்ள, மாவட்ட கல்வி அலுவலரான டிஇஓ பணியிடங்களை நிரப்ப நேரடி எழுத்துத் தேர்வுக்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்தத் தேர்வு எழுத மேல்நிலைப் படிப்பை முடித்து, முதுகலை பட்டப்படிப்பில் BEd தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இது மட்டுமல்லாமல், 10ம் வகுப்பு போக மேல்நிலை வகுப்பில் தமிழை பாடமாக கொண்டு படித்தவர்கள் மட்டுமே தேர்வு எழுத முடியும் என நிபந்தனையில் குறிப்பிடப்பட்டது. அரசின் இந்த உத்தரவால், Cbse பாடத்திட்டத்தில் படித்த ஒரு சில மாணவர்கள் இதை எழுத முடியாத சுழல் ஏற்பட்டுள்ளது.

“இந்திய அணி மிஸ் செய்யும் ஒரே பேட்ஸ்மேன் இவர் தான்”…, அஸ்வினின் வெளிப்படையான கருத்து!!

இது குறித்து கருத்து தெரிவித்த தேர்வர்கள், துணை கலெக்டர், மாவட்ட கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர் போன்ற பதவிகளுக்கு எல்லாம் இது போன்ற நிபந்தனை இல்லை எனும் போது கல்வித்துறையில் உள்ள டிஇஓ பணிக்கு மட்டும் இதை வைப்பது, நியாயமற்றது என தெரிவித்தார். இதனால், இதில் தளர்வுகளை அறிவிக்க வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here