100% கன்பார்ம் இது LCU தான்யா…, நிரூபணமான உண்மை.., கொண்டாடும் தளபதி ரசிகர்கள்!!

0
100% கன்பார்ம் இது LCU தான்யா..., நிரூபணமான உண்மை.., கொண்டாடும் தளபதி ரசிகர்கள்!!
100% கன்பார்ம் இது LCU தான்யா..., நிரூபணமான உண்மை.., கொண்டாடும் தளபதி ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்ற இயக்குனர் என்றால் அவர் லோகேஷ் கனகராஜ் தான். அந்த வகையில் இவர் இயக்கிய மாஸ்டர், கைதி மற்றும் விக்ரம் திரைப்படம் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது. இந்த படங்களின் மூலம் லோகேஷ் கனகராஜ் தமிழ் ரசிகர்களின் மனதில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துள்ளார். தற்போது விஜய்யுடன் மீண்டும் இணைந்துள்ளார். LEO என்ற பெயரில் உருவாகி வரும் இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அந்த வகையில் தற்போது படக்குழுவினர் காஷ்மீரில் ஷூட்டிங்கை நடத்தி வருகின்றனர். மேலும் சமீபத்தில் லோகேஷ் சொன்ன மாதிரி பிப்ரவரி 1,2,3 தேதிகளில் அப்டேட்கள் வெளியானது. குறிப்பாக ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ப்ரோமோ வீடியோ நேற்று மாலை 5 மணி அளவில் Sony Music யூடியூபில் வெளியானது. மேலும் இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி 1.3 கோடி பார்வையாளர்களை கடந்து இருப்பதாக கூறப்படுகிறது.

TNPSC அறிவிப்பால் வெடித்த சர்ச்சை., Group 1 தேர்வு எழுத புதிய கட்டுப்பாடு! தேர்வர்கள் அச்சம்!!

இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள ராம் திரையரங்கில் ரசிகர்களுக்காக பிரத்யேக காட்சி ஒளிபரப்பானது. ப்ரோமோவை பார்த்து விஜய் ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.மேலும் ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் கண்டிப்பா இது லோகேஷின் LCU தான் என்று கூறினார். அதுமட்டுமின்றி தரமான சம்பவத்திற்கு காத்துக் கொண்டிருக்கிறோம் என்றும், படம் வெற்றியடைய வாழ்த்துகிறோம் என்று ரசிகர்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here