அரசு பேருந்துகளில் மகளிருக்கான புதிய சேவை அறிமுகம் – தமிழக போக்குவரத்து துறை அதிரடி அறிவிப்பு!!

0
அரசு பேருந்துகளில் மகளிருக்கான புதிய சேவை அறிமுகம் - தமிழக போக்குவரத்து துறை அதிரடி அறிவிப்பு!!

தமிழகத்தில் அரசு விரைவு பேருந்துகளில், மகளிருக்கான தனி படுக்கை வசதி அறிமுகம் செய்யப்பட்ட உள்ளதாக மாநில போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

போக்குவரத்து துறை அறிவிப்பு:

தமிழகத்தில், மாநகரப் பேருந்துகளில் மகளிருக்கான கட்டணமில்லா பயணத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் பல லட்சம் பெண்கள் அன்றாடம் பயன் அடைந்து வருகின்றனர். இந்த நிலையில், அரசு விரைவு பேருந்துகளில் மகளிருக்கென்று தனி படுக்கை வசதி சேவையை அறிமுகப்படுத்த மாநில போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது. இனி அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்யும்போது 1 LB, 4LB ஆகிய பகுதிகளை பெண்களுக்கு ஒதுக்கீடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

வெளியூருக்கு செல்லும் குளிர்சாதனம் மற்றும் குளிர்சாதனமில்லா அரசு விரைவு பேருந்துகளில் பெண்களுக்கான, இந்த தனிப் படுக்கை வசதி சேவை, மிகுந்த பயனுள்ளதாக அமையும் என அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. பேருந்துகள் புறப்படும் வரை, குறிப்பிட்ட இந்தப் படுக்கைகளுக்கு பெண்கள் முன் பதிவு செய்யாவிட்டால், அதனை பொது படுக்கையாக மாற்றி மற்ற பயணிகளுக்கு வழங்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது.  இந்த திட்டத்திற்கு பெண்கள் பலரும் வரவேற்பு அளித்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here