தமிழக பள்ளிளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு?? வெளியான முக்கிய தகவல்!!

0
தமிழக பள்ளிளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு?? வெளியான முக்கிய தகவல்!!
தமிழக பள்ளிளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு?? வெளியான முக்கிய தகவல்!!

தமிழகத்தில், 2022-2023 ஆம் கல்வியாண்டு முடிந்த நிலையில் அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த கோடை விடுமுறை முடிந்த பிறகு அனைத்து பள்ளிகளிலும் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஜூன் 1ம் தேதியும், 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் ஜூன் 5ம் தேதியும் புதிய கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடங்கும் என கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

ஆனாலும், வெயிலின் தாக்கத்தை பொறுத்து பள்ளிகள் தொடங்கும் தேதியில் மாற்றம் ஏற்படவும் அதிக வாய்ப்பு இருக்க கூடும் என முன்பே தகவல் வெளியாகி இருந்தது. இது குறித்து, அன்பில் மகேஷும் பள்ளிகள் திறக்கும் வேளையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தால் முதல்வரின் ஆலோசித்த பிறகு தகுந்த முடிவினை அறிவிப்போம் என கூறியிருந்தார்.

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 42% ஆக அகவிலைப்படி உயர்வு.., அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு!!

இந்நிலையில், தமிழகத்தில் மட்டும் நாளொன்றுக்கு 100 டிகிரி செல்சியஸை தாண்டி கோடை வெயில் அடித்து மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்த வெயிலின் தாக்கத்தில் இருந்து, தற்காத்துக் கொள்ள அரசும் பல்வேறு முன்னறிவிப்புகளையும் அவ்வப்போது அறிவித்த வண்ணம் உள்ளது. இதற்கிடையில், உத்தரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் மாநிலங்களில் தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளதால் பள்ளிகளில் கோடை விடுமுறையை ஜூன் 15ம் தேதி வரை நீட்டித்து உள்ளது. இதனால், தமிழகத்தில் உள்ள பள்ளிகளிலும் கோடை விடுமுறையை நீட்டிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here