
தமிழக காவல் துறையானது அரசுடன் இணைந்து, சாலை விபத்துக்கள் ஏற்படாத வண்ணம் இருக்க பல்வேறு விதிமுறைகளையும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தேசிய நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் தேவையின்றி வாகனங்கள் நிறுத்தப்பட்டு இரவு நேரங்களில் விபத்துகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
சமீபத்தில் கூட, சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி வேன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த பயங்கரமான விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, சாலையோரத்தில் வாகனம் நிறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
கல்வித்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப திட்டம்., மாஸ் அறிவிப்பை வெளியிட்ட குஜராத் முதல்வர்!!!