கொரோனா கால கட்டத்திற்கு பிறகு ஏதாவது ஒரு பகுதியில் அசம்பாவிதம் நடைபெறும் சூழல் உருவானால் அதனை தடுக்க அந்தந்த மாநில அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்து வருகிறது. அந்த வகையில் இப்போது உத்திரப்பிரதேச மாநிலம் நொய்டா பகுதியில் வரும் நாட்களில் திருவிழாக்கள்கொண்டாடப்பட உள்ளது. இதற்காக அம்மாநிலத்தில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அந்த வகையில் இப்போது இன்று முதல் செப்டம்பர் 15ஆம் தேதி வரை நொய்டா பகுதி முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இந்த அறிவிப்பு குறித்து போலீசார் கூறுகையில், இந்த திருவிழாவை வைத்து பொதுமக்களிடையே ஏதேனும் கலவரம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக தான் இது போன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தமிழக வாகன ஓட்டிகளே…, இனி இந்த இடத்தில வண்டியை நிறுத்தினா அவ்ளோ தான்…, மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!!