தமிழகத்தில் பழைய பென்ஷன் திட்டம் வருமா?? முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்ட ஸ்டாலின்!!

0
அரசு ஊழியர்களுக்கு தொடரும் தீபாவளி சர்ப்ரைஸ் - ஓய்வூதிய நிலுவைத் தொகை வழங்க முடிவு! அரசு அதிரடி!!
அரசு ஊழியர்களுக்கு தொடரும் தீபாவளி சர்ப்ரைஸ் - ஓய்வூதிய நிலுவைத் தொகை வழங்க முடிவு! அரசு அதிரடி!!

அரசு ஊழியர்கள் நடத்திய ஜாக்டோ ஜியோ மாநாட்டில் பங்கேற்ற ஸ்டாலின், ஊழியர்களுக்கு பயனளிக்கும் முக்கிய திட்டங்களில் கையெழுத்து போட்டுள்ளதாக, மேடையில் அறிவித்தார்.

அறிவித்த ஸ்டாலின்:

தமிழகத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்த அரசு ஊழியர்கள், சமீப காலமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இவர்களுக்கான, மாநாட்டில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் முக்கிய முடிவு ஒன்றை அறிவித்தார். அதாவது, அரசு ஊழியர்கள் கொடுத்த முக்கிய ஆதரவால் தான் இந்த கழக அரசு அமைந்துள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள தற்காலிக ஆசிரியர்களும், பிற ஆசிரியர்களும் 60 வயது வரை தொடர்ந்து பணிபுரிய அனுமதி வழங்கப்படும் என அறிவித்தார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உங்களால் உருவான அரசு உங்களுக்கு துணை நிற்கும் : ஜாக்டோ-ஜியோ மாநாட்டில் முதலமைச்சர் உரை - தமிழ்நாடு

இது மட்டும் இல்லாமல், இவர்களுக்கான இட மாறுதல் கலந்தாய்வு அக்டோபர் 15 ஆம் தேதி முதல் நடத்தப்படும் என அறிவித்தார். பழைய பென்ஷன் திட்டம் குறித்து போராடி வரும் ஊழியர்களுக்கு, முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஸ்டாலின், ஊழியர்களுக்கு முக்கியத்துவம் தரும் சில கோப்புகளில் கையெழுத்து போட்டு விட்டு தான் இந்த மாநாட்டிற்கு வந்திருக்கிறேன் என்றார். அரசு ஊழியர்கள் 10 வருடம் பட்ட கஷ்டத்தை படிப்படியாக நிறைவேற்றுவோம், என அறிவித்த ஸ்டாலின்  விரைவில் நல்ல செய்தி வரும் என மாநாட்டில் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here