தமிழக கல்வித்துறையில் அதிரடி – 10 ஆண்டு பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு! அரசின் புதிய திட்டம்!!

0
தமிழகத்தில் மீண்டும் உயரும் கொரோனா - அமலாகும் புதிய கட்டுப்பாடுகள்! சுகாதாரத்துறை செயலாளர் கடிதம்!!
தமிழக கல்வித்துறையில் அதிரடி - 10 ஆண்டு பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு! அரசின் புதிய திட்டம்!!

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக உயர்கல்வித்துறையில் நிரப்பப்படாமல் உள்ள 7,000க்கும் அதிகமான ஆசிரியர் பணியிடங்களை, நிரப்ப அரசு அதிரடி திட்டம் ஒன்றை  செயல்படுத்த உள்ளது.

அரசின் திட்டம்:

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக அரசு கலை அறிவியல் கல்லூரியில், 7,000க்கும் அதிகமான ஆசிரியர் பணியிடங்கள் உருவாகியுள்ளது. கடந்த 2006-11ம் ஆண்டில் 3500 ஆசிரியர்களை அரசு நியமித்தது. அதன் பிறகு 2019 ல், ஆசிரியர் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தும், இதுவரை பணி நியமனம் குறித்து அறிவிக்கவில்லை. இதனால், மாணவர்களின் மொத்த எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதுகுறித்து பேசிய அரசு கல்லூரி ஆசிரியர் சங்கத் தலைவர் வீரமணி, விரைவில் ஆசிரியர் காலி பணியிடங்களுக்கான தேர்வு நடத்தப்பட்டு தகுதியான ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய மாநில கல்லூரி கல்வி இயக்குனர் ஈஸ்வரமூர்த்தி, இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இந்த பணியிடங்களை நிரப்ப உடனடியாக 2000 பேர் நியமிக்கப்படுவார் என  அமைச்சர் அறிவித்துள்ளதாக தெரிவித்தார். விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here