தமிழகத்தில் முதியோர் உதவித்தொகை இனி கட்? அரசு எடுக்கப்போகும் அதிரடி முடிவு!!

0
தமிழகத்தில் முதியோர் உதவித்தொகை இனி கட்? அரசு எடுக்கப்போகும் அதிரடி முடிவு!!

தமிழகத்தில், 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் உதவித்தொகை  நிறுத்தப்பட உள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது.

உதவித்தொகை நிறுத்தம்:

தமிழகத்தில் கடந்த 1962ம் ஆண்டு தொடங்கப்பட்ட முதியோர் உதவி தொகை வழங்கும் திட்டம், தொடக்கத்தில் மாதம் 200 ரூபாய் என இருந்தது. பின் அடுத்தடுத்து ஆட்சியில் படிப்படியாக உயர்த்தப்பட்டு, தற்போது மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. ஆதரவற்றோர், பிள்ளைகளால் கைவிடப்பட்டோர் உள்ளிட்ட 60 வயதை கடந்த முதியவர்களுக்கு மாதம் தோறும் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

முதியோர் உதவி தொகை வீடு தேடி வரும்: தமிழக அரசு | Dinamalar Tamil News

சமீப காலமாக இந்த உதவித்தொகை, பல மாவட்டங்களில் நிறுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் புதிதாக விண்ணப்பிப்போர் கொடுக்கும் விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படுகிறது. இது குறித்த கேள்வி எழுப்பிய முன்னாள் வருவாய்த்துறை அமைச்சர், முதியவர்களுக்கு வழங்கப்படும் இந்த தொகை நிறுத்தப்படுவது வேதனை அளிக்கிறது என்றும், வாக்குறுதியில் ரூ.1, 500 தருவோம் என சொல்லிவிட்டு இதை நிறுத்துவது முறையல்ல என்றும் குற்றம் சுமத்தினர்.

ஆனால், இது குறித்து விளக்கம் அளித்த அதிகாரிகள், பல இடங்களில் தகுதியில்லாதவர்கள் இந்த உதவித்தொகையை பெறுவதாகவும், அவர்களுக்கு மட்டுமே இந்த தொகை நிறுத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர். அது மட்டுமல்லாமல் சொந்த வீடு வைத்திருப்போர், மகன் மகளின் பராமரிப்பில் இருப்போர் இதற்கு விண்ணப்பிப்பதால், அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது என விளக்கம் அளித்துள்ளனர். இருந்தாலும், பல காரணங்களால் இந்த உதவித்தொகை நிறுத்தப்படுவது  வேதனை அளிப்பதாக, வயோதிகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here