அடேங்கப்பா.. என்னவா இருக்கு ஜோடி பொருத்தம் – ஆசை காதலனை முதல்முறையாக காட்டிய பிரபல சீரியல் நடிகை!

0
அடேங்கப்பா.. என்னவா இருக்கு ஜோடி பொருத்தம் - ஆசை காதலனை முதல்முறையாக காட்டிய பிரபல சீரியல் நடிகை!

சின்ன திரையில் வளர்ந்து வரும் இளம் நடிகையான பிரணிகா தக்‌ஷூ, தனது காதலனை சமூகவலைத்தள பக்கத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார்.

நடிகை பிரணிகா தக்‌ஷூ:

டிக் டாக் மூலம் பிரபலம் ஆகி சின்னத்திரையில் நடித்து வருபவர் தான் நடிகை பிரணிகா தக்‌ஷூ. இவர் பல ஆடிசன்களை கடந்து கடைசியில் பாவம் கணேசன் என்ற சீரியல் மூலம் சின்ன திரையில் தோன்றினார். அதன் பிறகு சீரியலில் நடித்துக் கொண்டிருந்த போதே காமெடி ராஜா கலக்கல் ராணி ரியாலிட்டி ஷோவில் கலந்து ஒரு கலக்கு கலக்கினார். தற்போது எங்கள் பாட்டன் சொத்து, வடசேரி படத்தில் நடித்து வெள்ளித்திரைக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் 2 தினங்களுக்கு முன்பு நடிகை பிரணிகா தக்‌ஷூ இன்ஸ்டா பக்கத்தில் தனது காதலனை அறிமுகப்படுத்தியுள்ளார். இதனை தொடர்ந்து, சீரியல்களில் நடிக்க தொடங்குவதற்கு முன்பே பிரணிகா குறும்படங்களில் நடிக்கும் பொழுது நவநீத் ராஜனுடன் டிக் டாக் மற்றும் இன்ஸ்டா ரிலீஸ் செய்த பல வீடியோக்கள், புகைப்படங்களை பிரணிகா தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அப்போது ரசிகர்கள் கேட்ட போது எந்த பதிலும் கூறாமல் கேள்விகளை தட்டி கழித்துள்ளார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்நிலையில் நவநீத் ராஜனுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து, “ஐ லவ் யூ குட்டு. இந்த வாக்கியம் ஒன்று போதும் அதில் எல்லாம் அடங்கும், உன்னை நான் ஒருபோதும் பிரியமாட்டேன், ஏனென்றால் உன்னை சேராமல் என் வாழ்க்கை முடியாது” என்று கூறியுள்ளார். இந்த பதிவின் மூலம் தன் காதலை உறுதிப்படுத்தியுள்ளார். ரசிகர்கள் பலரும் பிரணிகாவிடம் எப்பொழுதும் திருமணம் என்று கேட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here