இன்று அமலுக்கு வந்தது புதிய தளர்வுகள்… – கடைகள் திறப்பு, இ-பாஸ் முறையிலும் மாற்றம்!!!

0

தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு இன்று காலை 6 ஆம்  மணியுடன் முடிந்த நிலையில் தொற்று பரவல் சற்று குறைந்ததை அடுத்து தமிழக அரசு ஊரடங்கில் சில தளர்வுகளை கடந்த சனிக்கிழமை அறிவித்து இருந்தது. அதனடிப்படையில் இன்று முதல் புதிய தளர்வுகள் அமலுக்கு வந்து உள்ளன. மேலும் இ-பாஸ் பதிவு செய்யும் இணையதளத்திலும் அதற்கு ஏற்ப  மாற்றங்களையும் தமிழக அரசு செய்து உள்ளது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகம் இருந்த நிலையில் அதனை கட்டுப்படுத்த மே 10ம் தேதி முதல் இரவு ஊரடங்கு  அதை தொடர்ந்து மே 24 ஆம் தேதி முழு ஊரடங்கும் பின்பற்றப்பட்டது. தற்போது தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில் அரசு தொற்று அதிகம் உள்ள குறிப்பிட்ட 11 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களுக்கு சில தளர்வுகளை  அறிவித்துள்ளது. இந்த தளர்வுகள் இன்று முதல் நடைமுறைக்கு வந்து உள்ளன.

அதனடிப்படையில் , மளிகை , காய்கறி, இறைச்சிக் கடைகள் காலை 6 மணி முதல் திறக்கப்பட்டுள்ளன. மேலும் சுயதொழில் செய்வோர் கடைகளை திறக்கவும் வெளி இடங்களுக்கு சென்று வேலை செய்வோருக்கு இ-பதிவு வலைத்தளத்தில் இ -பதிவு செய்யும் வகையில் இணையதளத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எலக்ட்ரீசியன், பிளம்பர், கணினி பழுது பார்ப்பவர்கள், மோட்டார் வாகனம் பழுது பார்ப்பவர்கள், கார்பெண்டர், வீட்டு வேலை செய்பவர்கள்,  தனியார் பாதுகாப்பு சேவை போன்றோருக்கு  இ-பாஸில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இந்த தளர்வுகள் வருகிற 14-ஆம் தேதி வரை இருக்கும்.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here