மத்திய அரசின் கல்வி செயல்திறன் தரவரிசை குறியீடு….தமிழகம்,கேரளா முன்னிலை!!!

0

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பள்ளிக் கல்வித் துறையில் ஏற்படும் மாற்றங்களை மதிப்பிட்டு  கல்வி செயல்திறன் தரவரிசை குறியீட்டை மத்திய கல்வி அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும்  வெளியிட்டு வருகிறது. அதன்படி அந்தமான் நிகோபர் தீவு, சண்டிகர், கேரளா, பஞ்சாப், தமிழகம் போன்ற மாநிலங்கள் முன்னிலை வகிக்கிறது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனடிப்படையில், 2017-18ம்  ஆண்டு முதல் இந்த தரவரிசை குறியீடு முதன் முதலாக வெளியிடப்பட்டது. இந்நிலையில் 2019-20 கல்வியாண்டுக்கான கல்வி செயல்திறன் தரவரிசை குறியீட்டை மத்திய கல்வி அமைச்சகம் நேற்று வெளியிட்டது. இந்த தரவரிசை பள்ளிகளின் கல்வி கற்பிக்கும் நடைமுறை, அடிப்படை கட்டமைப்பு வசதிகள், மதிய உணவு திட்டம் போன்ற  70 பிரிவுகளின் அடிப்படையில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் தர வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

  

மேலும் 951 முதல் 1000 மதிப்பெண்கள் பெறும்  மாநிலங்களுக்கு தரவரிசையில் முதலிடம் வழங்கப்படும். இதனடிப்படையில் 2019-20 ஆண்டு இந்த பிரிவில் எந்த மாநிலங்களும் இடம்பெறவில்லை.901 முதல் 950 மதிப்பெண்கள் பெறும் மாநிலங்களுக்கு 2-ம் இடம் அளிக்கப்படுகிறது. இதனடிப்படையில்  அந்தமான் நிகோபர் தீவு, சண்டிகர், கேரளா, பஞ்சாப், தமிழகம் ஆகியவை இடம்பிடித்துள்ளன.

851 முதல் 900 வரை மதிப்பெண்கள் பிரிவில்  தாத்ரா-நாகர் ஹவேலி, குஜராத், ஹரியானா, மகாராஷ்டிரா, டெல்லி, புதுச்சேரி, ராஜஸ்தான் ஆகியவையும்  801 முதல் 850 மதிப்பெண்கள் பிரிவில்   ஆந்திரா, மேற்கு வங்கம், டையூ-டாமன், இமாச்சல பிரதேசம், கர்நாடகா, ஒடிசா, திரிபுரா, உத்தர பிரதேசம் ஆகியவையும், 751 முதல் 800 மதிப்பெண்கள் பிரிவில்  கோவா, உத்தராகண்ட், ஜம்மு காஷ்மீர், ஜார்கண்ட், லட்சத் தீவுகள், மணிப்பூர், சிக்கிம், தெலுங்கானா ஆகியவையும், 701 முதல் 750 மதிப்பெண்கள் பிரிவில் அசாம், பிஹார், மத்திய பிரதேசம், மிசோரம் ஆகியவையும், 651 முதல் 700 மதிப்பெண்கள் பிரிவில் அருணாச்சல பிரதேசம், சத்தீஸ்கர், நாகாலாந்து ஆகியவையும் இடம் பெற்றுள்ளன. மேகாலயா, லடாக் ஆகியவை பின்தங்கிய நிலையில் உள்ளன.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here