தமிழகத்தில் உயர்த்தப்பட்ட புதிய மின் கட்டணம் இன்று முதல் அமல் – மின்சார வாரியம் அறிவிப்பு!!

0
தமிழகத்தில் உயர்த்தப்பட்ட புதிய மின் கட்டணம்  இன்று முதல் அமல் - மின்சார வாரியம் அறிவிப்பு!!

தமிழகத்தில் மாற்றம் செய்யப்பட்ட புதிய மின் கட்டணங்கள், இன்று முதல் அமலுக்கு வருவதாக, மாநில மின்வாரியத்துறை அதிரடியாக அறிவித்துள்ளது.

மின்வாரிய துறை அதிரடி:

தமிழகத்தில், மின் கட்டணங்கள் உயர்த்தப்படுவதாக, மின்சாரத்துறை அமைச்சர் அண்மையில் அறிவித்தார். பொதுமக்களிடம் இது குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்ட பின், புதிய மின் கட்டணங்கள் இன்று முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 100 யூனிட் மின்சாரம் பயன்படுத்துவோருக்கு தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அது போக குடிசை விவசாயம், கைத்தறி, விசைத்தறி மற்றும் வழிபாட்டு தலங்கள் ஆகியவற்றுக்கு மின்சார மானியம் தொடர்ந்து வழங்கப்பட உள்ளது. 2 மாதங்களுக்கு 200 யூனிட் வரை பயன்படுத்துவோர் மாதம் ஒன்றுக்கு ரூ.27.50-ம், 300 யூனிட் வரை பயன்படுத்துவோர் ரூ.72.50-ம், 400 யூனிட் வரை உபயோகிப்போர் ரூ.147.50-ம், 500 யூனிட் வரை பயன்படுத்துவோர் ரூ.297.50-ம், அதற்கு மேற்பட்ட யூனிட் மின்சாரம் பயன்படுத்துவோர் மாதம் ஒன்றுக்கு அறிவிக்கப்பட்ட இந்த புதிய கட்டணங்கள் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய மின் கட்டணங்கள் அனைத்தும் மின்சார வாரிய இணையதளங்களில் வெளியிடப்படும் என்றும், இந்த புதிய கட்டண விவரங்களை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here