ரெய்னாவை தொடர்ந்து ஓய்வை அறிவித்த மற்றொரு ஜாம்பவான் – T20 உலக கோப்பையில் என்ன செய்ய போகிறார்??

0
ரெய்னாவை தொடர்ந்து ஓய்வை அறிவித்த மற்றொரு ஜாம்பவான் - T20 உலக கோப்பையில் என்ன செய்ய போகிறார்??
ரெய்னாவை தொடர்ந்து ஓய்வை அறிவித்த மற்றொரு ஜாம்பவான் - T20 உலக கோப்பையில் என்ன செய்ய போகிறார்??

ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மற்றும் நட்சத்திர பேட்ஸ்மேன் ஆரோன் பிஞ்ச் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஆரோன் பிஞ்ச் ஓய்வு!!

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான கடைசி ஆட்டம் நாளை (11-09-2022) நடைபெற உள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேனான ஆரோன் பிஞ்ச் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு ஒரு நாள் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்காக அறிமுகமானார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதனைத் தொடர்ந்து இதுவரை ஆரோன் பிஞ்ச் 145 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 5402 ரன்கள் குவித்துள்ளார். இதில் 17 சதங்கள் மற்றும் 30 அரை சதங்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தற்போது ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதன் பிறகு அவர் மற்ற சர்வதேச தொடர்களான டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலியா அணியில் இடம் பிடித்துள்ளார்.

மேலும் அந்த அணிக்கு அவர் கேப்டன் ஆகவும் இருந்து வழி நடத்த உள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இவர் அதிக பணிச்சுமை காரணமாக தான் ஒரு நாள் தொடர்களில் இருந்து ஓய்வு பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை வைத்து பார்க்கும்போது அவர் T20 உலக கோப்பையில் சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்க படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here