தமிழகத்தில் கல்வி & வேலை வாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவருக்கு இடஒதுக்கீடு? ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவு!!!

0
தமிழகத்தில் கல்வி & வேலை வாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவருக்கு இடஒதுக்கீடு? ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவு!!!

தமிழகத்தில் ஆண், பெண்களுக்கு நிகராக பல்வேறு நலத்திட்டங்களில் மூன்றாம் பாலினத்தவருக்கு முன்னுரிமையை மாநில அரசு வழங்கி வருகிறது. இந்த நிலையில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தூத்துக்குடியைச் சேர்ந்த கிரேஸ் பானு கணேசன், சென்னை உயர்நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்து இருந்தார்.

மனுவை பரிசீலித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர், “3ஆம் பாலினத்தவருக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும். அது தொடர்பான பதில் கருத்தையும் தமிழக அரசு சார்பாக தெரிவிக்க வேண்டும்.” எனக்கூறி மார்ச் 4 ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here