தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு…, தொடக்க கல்வித்துறை அதிரடி!!

0
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு..., தொடக்க கல்வித்துறை அதிரடி!!
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு..., தொடக்க கல்வித்துறை அதிரடி!!

தமிழகத்தில் பணி நியமனம், சம ஊதியம் வழங்குதல், நியமன தேர்வு ரத்து உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன் வைத்து ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் முடிவாக, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகள் 3 மாத காலத்திற்குள் நிறைவேற்றப்படும் என முதல்வர் கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், தொடக்கக் கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

இந்த சுற்றறிக்கையில், அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான பணி வரன்முறை செய்தல், தேர்வு நிலை, சிறப்பு நிலை வழங்குதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்த பணிகள் மீது கூடுதல் கவனம் செலுத்தி அதற்கான ஆணைகளை வரும் நவம்பர் 24 ஆம் தேதிக்குள் மாவட்ட கல்வி அலுவலர்கள் தொடக்கக் கல்வி இயக்குநரகம் அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசுப் பள்ளி ஆசிரியைகளே., சுடிதார் போட்டும் பள்ளிக்கு செல்லலாம்? அரசாணை குறித்த முக்கிய அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here