தமிழகத்தில் பள்ளி & கல்லூரி மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை .,, மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிக்கை!!

0
தமிழகத்தில் பள்ளி & கல்லூரி மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை .,, மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிக்கை!!
தமிழகத்தில் பள்ளி & கல்லூரி மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை .,, மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிக்கை!!

மத்திய அரசால் சிறுபான்மையினர் என்று அறிவிக்கப்பட்டுள்ள மாணவ-மாணவிகள் கல்வி ஊக்க தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

ஊக்கத்தொகை:

தமிழகத்தில், சிறுபான்மையின மாணவர்களுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு சார்பில் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது (2022- 23 ஆம் கல்வியாண்டில்) மாணவ-மாணவிகள் மத்திய அரசின் தேசியக் கல்வி உதவித்தொகை இணையதளத்தில், ஆன்லைன் மூலம் அக். 31 க்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகி இருந்தது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்நிலையில் மாணவ, மாணவிகள் கல்வி ஊக்க தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு இருப்பதாக பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ப. ஸ்ரீ வெங்கட பிரியா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் 2022-23 கல்வியாண்டில், பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த சிறுபான்மையின மாணவ-மாணவிகள் கல்வி ஊக்கதொகையை பெற அக். 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

போட்றா வெடிய., வாட்ஸ்அப் பயனர்களுக்கு வந்த சூப்பர் அப்டேட் – இனி இதற்கு கணக்கே இல்ல போங்க!!

அதாவது நவ. 15 ஆம் தேதி வரை பள்ளி படிப்பு, பேகம் ஹஜ்ரத் மஹால் கல்வி ஊக்க தொகைக்கு விண்ணப்பிக்கலாம் மற்றும் நவ. 30 ஆம் தேதி வரை பள்ளி மேற்படிப்பு, தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி படிப்பு, தகுதி மற்றும் வருமானம் அடிப்படையிலான கல்வி ஊக்க தொகைக்கு விண்ணப்பிக்கலாம். இந்த திட்டம் குறித்து மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here