வாட்ஸ் அப் பயனர்களுக்கு ஷாக் – இனி இதை பயன்படுத்த முடியாது! மெட்டா நிர்வாகம் அதிரடி அறிவிப்பு!!

0
வாட்ஸ் அப் பயனர்களுக்கு ஷாக் - இனி இதை பயன்படுத்த முடியாது! மெட்டா நிர்வாகம் அதிரடி அறிவிப்பு!!

உலகின் முன்னணி சமூக வலைத்தளமான வாட்ஸ் அப்பில், அதிரடி மாற்றம் ஒன்றை செய்ய உள்ளதாக மெட்டா நிர்வாகம் அதிரடியாக அறிவித்துள்ளது.

அதிரடி தடை:

உலகின் பலதரப்பட்ட மக்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக வலைதள ஆப்களில் ஒன்று வாட்ஸ்அப். இந்த தளத்தின் மூலம் உலகின் எந்த மூலையில் உள்ள ஒரு நபருக்கும் நம்மால் தகவல்களை ஈசியாக பரிமாற முடியும். சமீபத்தில் இந்த வாட்ஸ் அப்பில், பல புதிய அப்டேட்கள் கொண்டு வரப்பட்டது. அதன்படி ஒரு வாட்ஸ்அப் குழுவில் அதிகபட்சமாக 512 பேர் இருக்கலாம் என்ற நிலையில், தற்போது இந்த எண்ணிக்கையை 1,024 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும், தனியுரிமை கொள்கை கருதி ஒரு முறை மட்டும் பார்க்கக் கூடிய வகையில் அனுப்பப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இனி ஸ்கிரீன் ஷாட் அல்லது ஸ்கிரீன் ரெக்கார்ட் செய்ய முடியாது. இது போக நாம் தவறான செய்தியை அனுப்பி விட்டால் அதை 165 நிமிடங்களுக்குள் எடிட் செய்து மீண்டும் அனுப்பவது உள்ளிட்ட பல அப்டேட்களை மெட்டா நிர்வாகம் இதுவரை வெளியிட்டு வந்தது.

தமிழகத்தில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு கடும் எச்சரிக்கை.,,அபாரதம் கட்டலைனா!! வண்டி பறிமுதல்!!

இந்த நிலையில், whatsapp செயலில் இதுவரை இருந்து வந்த View once என்ற முறையில் சில மாற்றங்களை கொண்டு வரப் போவதாக மெட்டா நிர்வாகம் அறிவித்துள்ளது. அதாவது, வாட்ஸ் அப்பை கணினியில் பயன்படுத்தும் போது நாம் அனுப்பும் போட்டோ உள்ளிட்ட கோப்புகளை ஸ்கிரீன் ஷாட் எடுக்கும் வாய்ப்பு இருப்பதால், இனி View Once என்ற வசதியை Whatsapp web மற்றும் Whatsapp Desktop ஆகியவற்றில் நிறுத்த மெட்டா நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தற்போது இந்த அப்டேட்டுக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here