தமிழகத்தில் புதிதாக உருவாகும் 5 மாவட்டங்கள்…, வெளியான அதிரடி அறிவிப்பு!! 

0
தமிழகத்தில் புதிதாக உருவாகும் 5 மாவட்டங்கள்..., வெளியான அதிரடி அறிவிப்பு!! 
தென்னிந்தியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 38 மாவட்டங்கள் உள்ளன. இந்த மாவட்டங்களிலும், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என பிரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கூடுதலாக 5 மாவட்டங்கள் புதிதாக உருவாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன் மூலம்,  தமிழகத்தில் 43 மாவட்டங்களாக மாற உள்ளது.
அதாவது, கடலூர் மாவட்டம் இரண்டாக பிரித்து விருத்தாசலம் மாவட்டமாகவும், கோயம்புத்தூர் மாவட்டம் இரண்டாக பிரித்து பொள்ளாச்சி மாவட்டமாகவும், திருவண்ணாமலை மாவட்டம் இரண்டாக பிரித்து செய்யாறு மாவட்டமாகவும், சேலம் மாவட்டம் இரண்டாக பிரித்து ஆத்தூர் மாவட்டமாகவும், தஞ்சாவூர் மாவட்டம் இரண்டாக பிரித்து கும்பகோணம் மாவட்டமாகவும் பிரிய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வரும் ஜனவரி 26 குடியரசு தின விழாவில் தமிழக முதலமைச்சர்  தெரிவிப்பார் என தகவல் வெளியாகி உள்ளது.
  • விருத்தாசலம், ஸ்ரீமுஷ்ணம், திட்டக்குடி, வேப்பூர் தாலுக்காக்கள் விருத்தாசலம் மாவட்டத்தில் அடங்கும்.
  • கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை, உடுமலை, மடத்துக்குளம் பொள்ளாச்சி மாவட்டத்தில் அடங்கும்.
  • ஜமுனாமரத்தூர், போளூர், ஆரணி, செய்யாறு, வெம்பாக்கம், வந்தவாசி தாலுக்காக்கள் செய்யாறு மாவட்டத்தில் அடங்கும்.
  • கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் ஆகிய தாலுக்காக்கள் கும்பகோணம் மாவட்டத்தில் அடங்கும்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here