12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பற்றிய இணையவழி கருத்து கேட்பு – மாணவர்கள்,பெற்றோர்களின் மனநிலை என்ன ???

0

கொரோனா பரவலின் காரணமாக இந்த ஆண்டிற்கான 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை மே மாதம் நடத்த திட்டமிட்டு இருந்தனர்.ஆனால் வருகிற 7 ஆம்  தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளதால் தேர்வை நடத்துவது குறித்து மாணவர்கள்,பெற்றோர்கள்,கல்வியாளர்கள்,ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கருத்தினை இணையவழியில் 03.06.2021 அன்று கேட்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்க பள்ளிக்கல்வி துறை கேட்டுக்கொண்டுள்ளது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

 

மே மாதத்தில் நடைபெற இருந்த  12 ஆம் பொது தேர்வானது கொரோனா பரவலின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் மத்தியில் தேர்வு நடைபெறுமா இல்லையா என்ற குழப்பம் நிகழ்கிறது. எனவே, இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் அவர்கள் தேர்வினை பற்றிய தெளிவான கருத்துக்களை இணையவழி மூலம் கேட்டறிந்து பள்ளி கல்வித்துறை இயக்கத்திற்கு அனுப்பும் வகையில் தயார் செய்யும்படி உத்தரவு ஒன்றை முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பிறப்பித்து உள்ளார்.

அதுமட்டுமல்லாமல் அந்த அந்த பள்ளி மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களின் கருத்துக்களை சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர்கள்  மூலம் கேட்டறிந்து அதனை ஒரு தொகுப்பாக தயார்செய்து  முதன்மைக் கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு வலியுறுத்துமாறு கேட்டு கொண்டு உள்ளார்.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here