படவாய்ப்பு இல்லாமல் சின்னத்திரையில் கால் பதித்த கவர்ச்சி நடிகை – என்ன கொடுமை சார் இது??

0

வெள்ளித்திரையில் முக்கிய இயக்குனர் மற்றும் நடிகையும் படவாய்ப்பு இல்லாமல் தற்போது சின்னத்திரையில் களமிறங்கும் சோகம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கா இந்த நிலைமை என்று பலரும் வாடி வருகின்றனர்.

சின்னத்திரை

தற்போதெல்லாம் வெள்ளித்திரையை விட சின்னத்திரை தான் மக்கள் மத்தியில் நிலைத்துள்ளது. வெள்ளித்திரை நடிகைகளை விட சின்னத்திரை நடிகைகள் தான் பிரபலம். அந்த வகையில் பல சீரியல்கள் சக்கை போடு போட்டு வருகிறது. அந்த நடிகர், நடிகைகளும் பிரபலமடைந்து விடுகின்றனர்.

பல நடிகைகள் சின்னத்திரையில் களமிறங்கியுள்ளனர். ஆரம்பத்தில் ஒரு நடிகைக்கு வயதானால் தான் சின்னத்திரைக்கு வருவார்கள் ஆனால் தற்போதெல்லாம் இளம் வயதிலேயே சீரியலை தேடி வந்து விடுகின்றனர்.

இது இயக்குனர்களுக்கும் பொருந்த கூடிய விஷயம் தான். முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கியவர்கள் கூட தற்போது சின்னத்திரையில் களமிறங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது சந்தானத்தை வைத்து இயக்கிய பிரபல இயக்குனர் சாய் கோகுல் நாத் தற்போது கலர்ஸ் டிவியில் டைலர் சீரியலை இயக்கி வருகிறார். மேலும் இந்த சீரியலில் கவர்ச்சி நடிகையான சோனா முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். எப்படியும் வில்லியாக தான் இருக்கும் என்று வட்டாரங்கள் கூறி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here