தமிழக மக்களுக்கு வெள்ள நிவாரணம்:  ரொக்கமாக தான் வழங்க வேண்டும்…, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!!

0
தமிழக மக்களுக்கு வெள்ள நிவாரணம்:  ரொக்கமாக தான் வழங்க வேண்டும்..., சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!!
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு தமிழக அரசு ரூ. 6000-ஐ நிவாரணத் தொகையை ரொக்கமாக வழங்குவதாக அறிவித்திருந்தது. வரும் டிசம்பர் 17 ஆம் தேதி முதல் வழங்கப்பட உள்ள இந்த நிவாரணத் தொகை, வங்கிக் கணக்கில் செலுத்த கோரி மோகன்தாஸ், செல்வக்குமார் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.

இன்று (டிசம்பர் 15) விசாரணைக்கு வரப்பட்ட இந்த வழக்கிற்கு சென்னை உயர்நீதிமன்றம், வெள்ள நிவாரணம் என்பது உடனடித் தேவை. அதனை வழங்குவதை தாமதப்படுத்த முடியாது என கூறி வெள்ள நிவாரணம் ரூ.6000- ஐ ரொக்கமாக வழங்கலாம் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும், வெள்ள நிவாரணம் தகுதியானவர்களை சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் நிவாரணம் வழங்கியது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் தமிழக அரசுக்கு உத்தரவு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

தமிழக மக்களே.., ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கு நிவாரண தொகையா?? அமைச்சர் உதயநிதி தகவல்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here