தமிழக அரசின் இந்த துறை ஊழியர்களுக்கு பயோ மெட்ரிக் வருகைப் பதிவு., நிர்வாகம் நடவடிக்கை!!

0
தமிழக அரசின் இந்த துறை ஊழியர்களுக்கு பயோ மெட்ரிக் வருகைப் பதிவு., நிர்வாகம் நடவடிக்கை!!

தமிழகத்தில், பணிபுரியும் இந்த துறை சார்ந்த ஊழியர்களின் வருகையை பதிவு செய்ய பயோமெட்ரிக் அம்சத்தை நடைமுறைப்படுத்துவதாக, சம்பந்தப்பட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதிரடி அறிவிப்பு:

தமிழக அரசு ஊழியர்களின் வருகையை பதிவு செய்ய, பெரும்பாலான துறைகளில் இன்னமும் கையெழுத்து திட்டமே நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் அலுவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் உட்பட 14,897 நபர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இவர்களில் ஒப்பந்த முறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, ஏற்கனவே பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவு கணக்கிடப்படுகிறது. தற்போது, மாநகராட்சி ஊழியர்களின் வருகையையும் பயோமெட்ரிக் எனப்படும் முகப்பதிவு முறையில் பதிவு செய்ய, மாநகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

தமிழக அரசின் இந்த துறை ஊழியர்களுக்கு பயோ மெட்ரிக் வருகைப் பதிவு., நிர்வாகம் நடவடிக்கை!!

இன்ஸ்டாவில் மூழ்கிய மகனை கண்டித்த தாய்.., ஓடும் ரயிலில் முன் பாய்ந்து தற்கொலை!!

முதற்கட்டமாக அலுவலகங்களில் உள்ள முக்கிய இடங்களில் 315 க்கும் மேற்பட்ட பயோமெட்ரிக் மெஷின்களை பொருத்தி, ஊழியர்களின் வருகையை கணக்கிட வழி வகுத்துள்ளது. விரைவில் இந்தத் திட்டத்தை, நகர்ப்புற சுகாதார மையம் மற்றும் சமுதாய நல மையங்களிலும் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளது. மாநகர நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு, பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here