போஸ்ட் ஆபிஸில் அக்கவுண்ட் வச்சுருக்கீங்களா.., இனி மேல் இதை செய்யாதீங்க.., எச்சரித்த இந்திய அஞ்சலக வங்கி!!

0
போஸ்ட் ஆபிஸில் அக்கவுண்ட் வச்சுருக்கீங்களா.., இனி மேல் இதை செய்யாதீங்க.., எச்சரித்த இந்திய அஞ்சலக வங்கி!!
போஸ்ட் ஆபிஸில் அக்கவுண்ட் வச்சுருக்கீங்களா.., இனி மேல் இதை செய்யாதீங்க.., எச்சரித்த இந்திய அஞ்சலக வங்கி!!

அஞ்சல் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என இந்திய அஞ்சலக வங்கி எச்சரித்துள்ளது.

அஞ்சலக வங்கி

உலகெங்கிலும் கலந்துரையாடல், கல்வி, மின்னஞ்சல், புரட்சி என அன்றாட வாழ்வில் பல்வேறு நன்மைகளை தருகிறது இணையவழி சேவை. அதே நேரத்தில் நாணயத்தின் இருபக்கம் இருப்பது போல மோசடி, திருட்டு, கடத்தல், தவறான வழிக்கு அழைத்துச் செல்லுதல் போன்ற தீமைகளும் அந்த இணையத்தில் உள்ளது. இதில் ஒன்றாக வலம் வரும் வங்கிக் கணக்கு மோசடி குறித்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது அனைத்து மக்களும் வங்கிக் கணக்கு தொடங்கும் திட்டத்தின் கீழ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசால் இந்திய அஞ்சலக வங்கி அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் படி அஞ்சலகத்தில் பல மக்கள் கணக்கு வைத்துள்ளனர். தற்போது அஞ்சல் வங்கியில் கணக்கு மேற்கொள்ளும் கிராம மக்கள், பழங்குடியினர், மற்றும் கல்வியறிவு இல்லாதவர்களிடம் வேலைவாய்ப்பு போன்ற சில காரணங்களை கூறி வங்கி கணக்கில் இருந்து சட்டவிரோத பரிவர்த்தனையை மோசடி கும்பல் செய்து வருகிறது.

தமிழக அரசின் இந்த துறை ஊழியர்களுக்கு பயோ மெட்ரிக் வருகைப் பதிவு., நிர்வாகம் நடவடிக்கை!!

  • இதனால் வாடிக்கையாளர்கள் கவனமாக இருக்க வேண்டும் என இந்திய அஞ்சலக வங்கி எச்சரித்துள்ளது.
  • பரிவர்த்தனையின் உண்மைத்தன்மையை அறியாமல் பணம் செலுத்தவோ எடுக்கவோ கூடாது.
  • தெரியாத நபர்களிடம் வங்கி கணக்கு, தனிப்பட்ட தகவல் மற்றும் மொபைல் எண் போன்றவைகளை பகிர கூடாது.
  • வங்கியில் கணக்கு தொடங்குவதற்கு மூன்றாம் நபரின் மொபைல் எண் பயன்படுத்த கூடாது.
  • மேலும் வங்கியில் அவ்வப்போது அடையாளம் தரவை அப்டேட் செய்து சோதித்து பார்ப்பதன் மூலம் மோசடி செய்பவர்களிடம் இருந்து வாடிக்கையாளர்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்றும் அஞ்சலக வங்கி தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here