தமிழகத்தில் யாருக்கெல்லாம் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும்? மின்சாரத்துறை அமைச்சர் விளக்கம்!!

0
தமிழகத்தில் யாருக்கெல்லாம் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும்? மின்சாரத்துறை அமைச்சர் விளக்கம்!!
தமிழகத்தில் யாருக்கெல்லாம் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும்? மின்சாரத்துறை அமைச்சர் விளக்கம்!!

தமிழகத்தில், தற்போது நடைமுறையில் இருக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் யாருக்கெல்லாம் தொடரும் என மின்சாரத்துறை அமைச்சர், செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

அமைச்சர் விளக்கம்:

தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன், மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தின் மூலம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தின் படி, தற்போது பொதுமக்களிடம் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மின் கட்டணத்தில் ஏற்படும் முறைகேடுகளை தடுக்க, மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது அவசியம் என அரசு அறிவித்தது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதற்கான காலக்கெடு இன்று தொடங்கி டிசம்பர் 31ம் தேதிக்குள் முடிவடையவுள்ளது. என்னதான் மின்கட்டணம் உயர்த்தப்பட்டாலும் நெசவாளர்கள், விவசாயிகள் மற்றும் 100 யூனிட் க்கும் கீழ் மின்சாரம் பயன்படுத்துவோர் அனைவருக்கும் இலவச மின்சாரம் தொடரும் என அறிவித்திருந்தார்.

ஆதாரைத் தொடர்ந்து, அனைத்து செயல்களுக்கும் இனி இந்த ஆவணம் கட்டாயம்., அமலாகும் புதிய சட்டம்!!

இந்த நிலையில், ஒருவர் 5 மின் இணைப்புகளுக்கு மேல் வைத்திருந்தாலும், அவர்களுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here