ஆதாரைத் தொடர்ந்து, அனைத்து செயல்களுக்கும் இனி இந்த ஆவணம் கட்டாயம்., அமலாகும் புதிய சட்டம்!!

0
ஆதாரைத் தொடர்ந்து, அனைத்து செயல்களுக்கும் இனி இந்த ஆவணம் கட்டாயம்., அமலாகும் புதிய சட்டம்!!
ஆதாரைத் தொடர்ந்து, அனைத்து செயல்களுக்கும் இனி இந்த ஆவணம் கட்டாயம்., அமலாகும் புதிய சட்டம்!!

அரசின் அனைத்து செயல்களுக்கும், ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது, பிறப்பு சான்றிதழையும் அரசின் அனைத்து செயல்களுக்கும் கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்த சட்ட மசோதாவை, வரும் 7ம் தேதி கூடும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய அரசு முடிவு எடுத்துள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த மசோதா ஒப்புதல் பெறப்பட்டு, சட்டமாக அமலானால் மத்திய மற்றும் மாநில அரசு வேலை, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, பள்ளி கல்லூரிகளில் அட்மிஷன், சொத்து பிரிப்பு போன்ற அனைத்து செயல்களுக்கும், பிறப்பு சான்றிதழ் கட்டாயமாக்கப்படும் என்பது உறுதி. இது மட்டும் அல்லாமல், பிறப்பு இறப்பு பதிவு சட்டம் 1969 படி, குழந்தை பிறந்த 21 நாட்களில் இது குறித்த விவரங்களை அரசுக்கு தெரிவித்து பிறப்பு சான்றிதழ் பெறுவது கட்டாயம் என்பதும் சட்டமாக்கப்படும்.

தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுக்கு தடை இல்லை? ஆளுநரின் தாமதத்தால் மசோதா காலாவதி!!

இந்த பிறப்பு இறப்பு சான்றிதழை, ஆன்லைன் வாயிலாக வழங்குவதால் வாக்குப்பதிவில் நடைபெறும் கள்ள ஓட்டு போடுவதை தடுக்கும் வாய்ப்பு உருவாகும். இது மட்டும் இல்லாமல் இந்த பிறப்பு சான்றிதழ் மூலம், 18 வயது நிரம்பிய ஒருவருக்கு வாக்காளர் வரைவு பட்டியலில் சேரும் வாய்ப்பு உடனடியாக வழங்கப்படும். மத்திய அரசின் இந்த சட்ட மசோதாவுக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here