ஆன்மீக அன்பர்களே.,கார்த்திகை-க்கு இந்த கோவில் போறீங்களா? முதல் 2500 நபர்களுக்கு மட்டுமே அனுமதி!!

0
ஆன்மீக அன்பர்களே.,கார்த்திகை-க்கு இந்த கோவில் போறீங்களா? முதல் 2500 நபர்களுக்கு மட்டுமே அனுமதி!!
ஆன்மீக அன்பர்களே.,கார்த்திகை-க்கு இந்த கோவில் போறீங்களா? முதல் 2500 நபர்களுக்கு மட்டுமே அனுமதி!!

திருவண்ணாமலை தீபத் திருநாள் அன்று மலை மீது ஏறும் பக்க்தர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தீபத்திருநாள்:

பொதுவாக கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரமும், பௌர்ணமி தினமும் சேர்ந்து வரக்கூடிய நாள் திருக்கார்த்திகை தீபத் திருநாளாக கொண்டாடப்படுகிறது. இந்த விசேஷமான நாளில் திருவண்ணாமலையில் உச்சியில் இருந்து அண்ணாமலை தீபம் ஏற்றப்படும். இந்த தீபத்தை பார்க்கும் பொழுது லிங்கம் போன்று காட்சியளிக்கும். அதை காண்பதற்கு மக்கள் ஆரவாரத்துடன் மலை ஏறுவது வழக்கமாக நடந்து வருகிறது. அந்த வகையில் இந்த வருடம் நடக்கும் தீபத்திருநாள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதாவது வருகிற 6.12.2022 அன்று காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே மலையேற முடியும். மேலும் முதலில் வரும் 2500 பேர் மட்டுமே மலையேற அனுமதிக்கப்படுவார்கள். அந்த பக்தர்களை தேர்ந்தெடுக்கும் விதமாக, செங்கம் சாலை கலைஞர் கருணாநிதி அரசுக் கலை கல்லூரி வளாகத்தில் சிறப்பு மையம் திறக்கப்பட்டு போட்டோவுடன் கூடிய அனுமதி சீட்டு வழங்கப்படும்.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்(02.12.2022) – முழு விவரம் உள்ளே!!

இதற்கு பக்தர்கள் தங்களின் ஏதேனும் அடையாள ஆவணங்களில் ஒன்றை கொடுத்து அனுமதி சீட்டு பெற வேண்டும். மேலும் பக்தர்கள் கோவிலுக்கு அருகில் இருக்கும் வழியில் தான் மலையேற வேண்டும் என்றும், வேறு பாதைகளில் செல்வதற்கு தடை என்றும் அறிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி மலையேறும் போது விரைவில் தீப்பிடிக்க கூடிய பொருட்களை கொண்டு செல்ல கூடாது.

இதை தொடர்ந்து தண்ணீர் பாட்டிலை மட்டும் தான் மேலே கொண்டு செல்ல வேண்டும். அந்த தண்ணீர் பாட்டில் காலியான பின்பு மீண்டும் கீழே கொண்டு வரவேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் பக்தர்கள் கொண்டு வரும் நெய்யினை அனுமதிக்கப்பட்ட கொப்பரையில் மட்டுமே ஊற்ற வேண்டும், வேறு எந்த இடத்திலும் ஊற்ற கூடாது என்று சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் படி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here