இந்த படங்களை திரையில் வெளியிடப்போவதில்லை – கறாராக தெரிவித்த திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம்!!

0

நேரடியாக அமேசான் ப்ரைம், நெட்ப்ளிக்ஸ் போன்ற OTT தளங்களில் வெளியாகும் படங்களை திரையரங்கில் வெளியிடப்போவதில்லை என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

2020 ஆம் ஆண்டில் இருந்தே அரசு அறிவித்த கொரோனா நோய் தடுப்பு கட்டுப்பாடுகளால் திரையரங்குகள் மூடப்பட்டது. இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மேலும் படப்பிடிப்பிற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் நிலைமை இன்னும் மோசமாகியது. பின்னர் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டபோது, படப்பிடிப்பிற்கு தளர்வுகள் அளிக்கப்பட்டது.

இருப்பினும் திரையரங்குகள் திறக்க அனுமதி அளிக்கப்படாததால் பட தயாரிப்பாளர்கள் OTT தளங்கள் மூலம் படங்களை வெளியிட்டன. தற்போது இரண்டாம் அலை முடிந்துள்ளதால் திரையரங்குகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், திரையரங்குகளில் வெளியாகும் படங்களை 4 வார இடைவெளிக்குப் பிறகே ஓ.டி.டி.யில் வெளியிட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

4 வார இடைவெளிக்குப் பிறகே ஓ.டி.டி.யில் படம் வெளியாகும் என சான்றளித்தால் மட்டுமே திரையரங்கில் வெளியிடுவோம் என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தலைவி படத்தை திரையரங்கில் வெளியிட்ட 2 வாரங்களில் ஓ.டி.டி.யில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த முடிவுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here