காற்று மாசுபட்டால் இந்திய மக்களின் ஆயுட்காலம் இவ்வளவு குறையுமா? – அதிர்ச்சி அளித்த அமெரிக்காவின் ஆய்வு அறிக்கை!!

0

அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகமானது காற்று மாசுபாடு குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது, அதில் காற்று மாசுபாட்டின் காரணத்தால் இந்தியர்களின் ஆயுள்காலம்  9 ஆண்டுகள் வரை குறையலாம் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் காற்று மாசுபாடு:

பூமியில் காற்று என்பது பெரும் பங்கு வகித்து வருகிறது. நாம் வாழும் இந்த பூமியில் உள்ள காற்றில் 79% நைட்ரஜனும் 20% பிராணவாயுவும், 3% கரியமிலவாயுவும், சிறிதளவு பிற வாயுக்களும் உள்ளன.  நாம் வாழ்வதற்கு தேவையான அடிப்படை ஆதாரங்களில் ஒன்றாக காற்றானது இருந்து வருகிறது. தற்போது தொழில்மயமாதல், நவீனமயமாதல் போன்றவற்றால் காற்றானது பாதிப்படைகிறது.


இந்தியா உட்பட பல நாடுகளில் காற்று   மாசுபாடு  ஒரு நிலையான பிரச்சனையாக இருந்து வருகிறது. நாம் சுவாசிக்கும் காற்றானது  தொழிற்சாலை மற்றும் வாகனங்கள் வெளியிடும் புகையினால் அசுத்தப்படுத்தப்படுகின்றது. வெளியேறும் புகையினால் வளிமண்டலத்தில் அமிலத்தன்மையை ஏற்படுத்துக்கின்றது. இதனால் மக்களுக்கு கண் எரிச்சல், தலைவலி, தொண்டைக்கட்டு, காய்ச்சல் மற்றும் புற்றுநோய் போன்ற பல நோய்கள் ஏற்படுகின்றன.

 

இந்நிலையில் அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகமானது எரிசக்தி கொள்கை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவில் தற்போது கடுமையான காற்று மாசுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், பூமியில் மிகவும் மாசுபடும் முதல் 5 நாடுகளில் இந்தியாவும் தொடர்ந்து இடம்பிடித்து வருவதாக அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. மேலும் இவ்வாறு அதிகரித்த காற்று மாசுபட்டால் இந்தியர்களின் ஆயுட்காலமானது 9 ஆண்டுகள் வரை குறையலாம் என்று ஆய்வில் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here