‘பாரதிக்கும் வெண்பாவுக்கும் கல்யாணம் ஆகவில்லை’ உண்மையை உடைத்த அஞ்சலி… அதிர்ச்சியில் கண்ணம்மா!!!

0

TRP ரேட்டிங்கில் எப்பொழுதும் டாப்பில் இருக்கும் சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலின் ஒரு புது அப்டேட் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அதில் அஞ்சலியின் வளைகாப்பின் போது, பாரதிக்கும் வெண்பாவுக்கும் திருமணம் ஆகவில்லை என்ற உண்மையை உடைக்கிறார் அஞ்சலி. அதை கேட்கும் கண்ணம்மா அதிர்ச்சியில்  திகைத்து உள்ளார்.

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போதைய கதையாக, அஞ்சலியின் வளைகாப்பிற்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அகில் அஞ்சலிக்கு சர்ப்ரைஸாக நகைகள் வாங்கி தந்து அவரை மகிழ்விக்கிறார். மேலும் இந்த விழாவுக்கு பாரதி, சௌந்தர்யா, வேணு மற்றும் ஹேமா அனைவரும் வருகின்றனர். அதே வேளையில் கண்ணம்மாவும் லட்சுமியுடன் வருகிறார்.

அவர்களை பார்த்து பாரதி மற்றும் சௌந்தர்யா ஷாக்கில் உள்ளனர். மேலும் அவர்களின் சந்தோஷத்தை கெடுக்க வெண்பாவும் வளைகாப்புக்கு வருகிறார். இவ்வாறு பரபரப்பான காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் தற்போது இந்த சீரியலின் அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அந்த அப்டேட்டில் அஞ்சலி மேடையில் அமர்ந்திருக்க வளைகாப்பு விழா துவங்குகிறது.

அப்பொழுது சௌந்தர்யா அஞ்சலிக்கு நலங்கு வைக்கிறார். அதன் பின்னர் சௌந்தர்யா, பாரதியை அழைத்து நலங்கு வைக்குமாறு கூறுகிறார். அப்பொழுது பாரதி உடன் வெண்பாவும் நலங்கு வைக்க வருகிறார். இதை விரும்பாத குடும்பத்தினர் முகத்தை சுளிக்கின்றனர். இந்நிலையில் அஞ்சலி தன் அம்மாவிடம் கல்யாணம் ஆகாதவங்க நலங்கு வைக்கலாமா? என கேட்கிறார்.

அதற்கு பாக்கியா, இப்போ இங்க யாரு கல்யாணம் ஆகாமல் இருக்காங்க என கேட்கிறார். அதற்கு அஞ்சலி இன்னும் வெண்பாவுக்கு தான் கல்யாணம் ஆகலேல என கூறி உண்மையை உடைத்து விடுகிகிறார். இதை கேட்கும் கண்ணம்மா அதிர்ச்சியில் உறைந்து அப்படியே நிற்கிறார். வெளியான புதிய அப்டேட்டால் பாரதி கண்ணம்மா ரசிகர்கள் அடுத்தடுத்த எபிசோடுகளை எதிர்நோக்கி காத்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here