சிட்டு சிறு குருவி பறந்த திசையும் தெரியவில்லை – இன்று உலக சிட்டுக்குருவி தினம்.!

0

வீடுகளின் முன் கூட்டமாக வந்து செல்லும் சிட்டுக்குருவி தற்போது அழிந்து வரும் பறவை இனங்களில் ஒன்றாகும். முன்பெல்லாம் நம் வீடுகளில் கூடுகட்டி வாழ்ந்து வந்தன. தற்போது உள்ள தொழில் நுட்பங்களில் சிட்டு குருவி இனமே அழிந்து வருகிறது. மேலும் சிட்டுக்குருவி இருந்த காலத்தில் அதன் சத்தத்தில் தான் காலை பொழுது விடியும். எனவே சிட்டுக்குருவியின் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த மார்ச் 20 இல் சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாடப்படுகிறது.

இந்திய இயற்கை பாதுகாப்பு மையம்

இத்தினத்தை இந்திய இயற்கை பாதுகாப்பு மையம் மற்றும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சுற்றுசூழல் அமைப்பு சேர்ந்து கடைபிடிக்கிறது. பறவை இனங்களிலேயேயே சிட்டுக்குருவி மிக சிறியதாகவும் மேலும் கீச் கீச் என்று அழகாக கூக்குரலிடும் பறவையாகும். இது மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களில் வயல்வெளிகளில் காணப்படும். இது வீட்டுக்குள் கூட்டம் கூட்டமாக வந்து செல்லும்.

முன்னாளில் எல்லா வீடுகளும் ஓட்டு வீடாகவே இருந்தன. அதனால் அதில் கூடு கட்டி வாழ்ந்தது. தற்போது உள்ள காலகட்டத்தில் கான்கீரிட்கட்டடங்கள் குருவிகள் வாழவழியில்லாமல் செய்து விட்டன. இப்பொழுது அனைத்தும் நகரமயமானதால் வயல்களில் கூட தங்க முடியாத நிலையில் சிட்டுக்குருவி இனம் அழிந்து கொண்டே வருகிறது.

அதே போல நெல், கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட உணவு தானியங்கள் சாக்கு மூட்டைகளில் சேமிக்கப்படும். அதிலுள்ளதுளைகள் வழியே தானியங்கள் சிதறும். அவற்றை குருவி, காகம் போன்ற பறவையினங்கள் உண்டு வாழ்ந்தன. ஆனால் தற்போது பிளாஸ்டிக் பைகளில் ‘பேக்’ செய்யப்படுவதால், சிட்டுக்குருவிகளுக்கான தானியங்கள் கிடைக்காமல் போய்விட்டது.

மேலும் டவர்கள் அதிகரித்து வருவதால் அதன் கதிர்வீச்சு சிட்டுக்குருவி இனத்தை அழித்து கொண்டே வருகிறது. சிட்டுக்குருவி உள்பட அழிந்து வரும் இதர பறவை இனங்களை காப்பதற்குஅனைவரும் முயற்சி செய்ய வேண்டும்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here