பிரதமர் மோடி தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் – ஊரடங்கு நீட்டிப்பு & EIA 2020 குறித்து ஆலோசனை!!

0
PM Modi
PM Modi

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது.

அமைச்சரவைக் கூட்டம்..!

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. இருப்பினும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதற்கிடையே, கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள பொது ஊரடங்கு நாளை மறுநாள் ஜூலை 31ம் தேதியுடன் முடிவடைகிறது.

இந்நிலையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கையால் இ.ஐ.ஏ 2020-ஐ தமிழகத்துக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் செயல் என அரசியல் கட்சி தலைவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் காற்று மாசு 70% குறைவு – ஐ.நா அறிக்கை..!

இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லி 7 லோக் கல்யாண் மார்க் இல்லத்தில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது. இந்த அமைச்சரவை கூட்டத்தில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ரயில்வேதுறை அமைச்சர் பியுஷ் கோயல், மனித மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால், சுற்றுச்சூழல் துறை பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களும் பங்கேற்கவுள்ளனர்.

இந்த கூட்டத்தில் ஊரடங்கு நீட்டிப்பதா, தளர்த்துவதா என்பது குறித்தும், இதனைபோல் EIA 2020 குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது. மேலும் நாட்டின் பொருளாதாரம் குறித்தும், மருத்துவக் படிப்பில் OBC பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு செய்வது குறித்து ஆலோசனை செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here