கொரோனா ஊரடங்கு காலத்தில் காற்று மாசு 70% குறைவு – ஐ.நா அறிக்கை..!

0

கொரோனா ஊரடங்கு காலத்தில் டெல்லியில் வளிமண்டலத்திலுள்ள நைட்ரஜன் டை ஆக்ஸைடு வாயுவின் அளவு 70% குறைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

ஐ.நா ஆய்வு..!

இந்தியாவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் பொது முடக்கம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் பல்வேறு துறைகளுக்கு சிக்கல்கள் ஏற்பட்டன. இந்நிலையில் டெல்லியில் கொரோனா ஊரடங்கிற்கு முன் காற்று மாசுபாடு அதிகமாக வந்திருந்தது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பொருளாதார நடவடிக்கைகளை கட்டுப்படுத்தியபோது மாசுபாடு மற்றும் கரியமில வாயு வெளியேற்றம் கடுமையாக வீழ்ச்சியடைந்தது.

இது தொடர்பாக ஆய்வை மேற்கொண்ட ஐக்கிய நாடுகள் சபை, கொரோனா ஊரடங்கு காலத்தில் டெல்லியில் வளிமண்டலத்திலுள்ள நைட்ரஜன் டை ஆக்ஸைடு வாயுவின் அளவு 70% குறைந்துள்ளதாகவும், சீனாவின் நகர்ப்புறங்களில் 40 சதவீதமும், பெல்ஜியம் மற்றும் ஜெர்மனியில் 20 சதவீதமும் மற்றும் பல்வேறு பகுதிகளில் 19 – 40 சதவீதம் வரை சரிந்துள்ளது என தெரிவித்துள்ளது.

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் – ஸ்டாலின் அறிக்கை..!

மேலும் மோசமான காற்றின் தரமான கொரோனா இறப்பு விகிதங்களுடன் தொடர்பில் உள்ளன என்றும் ஆய்வுகள் மூலம் சுட்டிக்காட்டியுள்ளது. கொரோனா பொது முடக்கத்தை மீண்டும் திறப்பது காற்றின் மாசின் அளவை அதிகரிக்க செய்யும் என எச்சரித்த ஐ.நா., சரியான கொள்கை முடிவுடன் இதனை அணுக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here