Thursday, March 28, 2024

பல வகையான பயன்களை கொண்ட சத்து மாவு!!

Must Read

குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் மற்றும் ஆரோக்கியம் தரும் எளிமையான சத்து மாவு எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

10 பாதம், 10 முந்திரி, 3 ஸ்பூன் பார்லி, 3 ஸ்பூன் ஜவ்வரிசி, 1/2 கப் கோதுமை மாவு மற்றும் 1/2 பால் பவுடர்

செய்முறை

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து பற்ற வைக்க வேண்டும். மிதமான சூடானவுடன், 10 பாதம் மற்றும் 10 முந்திரியை சேர்த்து வறுக்க வேண்டும். அவை நன்றாக வறுபட்டவுடன், அதனை வேறு பாத்திரத்தில் மாற்ற வேண்டும். பின்பு, வறுத்த அதே பாத்திரத்தில் 3 ஸ்பூன் பார்லி மற்றும் 3 ஸ்பூன் ஜவ்வரிசி சேர்த்து வறுக்க வேண்டும்.

அப்படியா?? ⇛⇛ மிரட்டியதால் தேசிய தலைவர் புகாரை வாபஸ் வாங்கிய பெண்!!

நன்கு வறுபட்ட ஜவ்வரிசி, பிரகாசமான வெள்ளை நிறத்தில் மாறும். அவ்வாறு மாறியவுடன், அதனையும் வேறு பாத்திரத்தில் மாற்றி கொள்ள வேண்டும். வறுத்த அனைத்தையும் ஒன்றாக சேர்த்து பொடியாக அரைக்க வேண்டும்.

பின், 1/2 கப் கோதுமை மாவை பாத்திரத்தில் சேர்த்து வறுக்க வேண்டும். வறுத்த கோதுமை மாவை அரைத்து வைத்த பொடியோடு சேர்த்து நன்கு கலக்க வேண்டும். மேலும், அதனுடன் 1/2 கப் பால் பவுடர் சேர்த்து கலக்கி கொள்ள வேண்டும். சத்துள்ள சத்து மாவு தயாராகியவுடன், காற்று புகாத பாத்திரத்தில் மாற்றி நன்கு மூடி வைத்து கொள்ள வேண்டும். ஒரு தம்ளர் பாலுடன் ஒரு ஸ்பூன் மாவை சேர்த்து குடிக்க வேண்டும்.

பயன்கள்

இந்த சத்து மாவை காலை மற்றும் மாலை பாலுடன் சேர்த்து பருகினால் புத்துணர்ச்சி கிடைக்கும். மேலும், குழந்தைகளுக்கு தினந்தோறும் இதனை கொடுத்து வந்தால், நன்கு வளர்ச்சி அடைவார்கள். இதில் பால் பவுடர் சேர்த்திருப்பதால், சுடு தண்ணீரில் கூட சேர்த்து இதனை பருகலாம்.

கொலஸ்ட்ரால் பிரச்சினை முதல் வயது முதிர்வு வரை எல்லாவித நோய்களுக்கும் சிறந்த மருந்தாக இச்சத்துமாவு இருக்கும். மேலும், முக சுருக்கங்களை போக்கி, மிருதுவான சருமமாக மாற உதவும். இதனில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், மெக்னீசியம், காப்பர் போன்ற ஊட்டச்சத்துக்கள் ரத்த நாளங்களில் சீரான ரத்த ஓட்டத்தை செய்து, இதய நோய்களில் வராமல் தடுக்கும்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு: அதிகாரிகளுக்கு எதிரான நடவடிக்கை விவரம்., ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!!

கடந்த 2018 ஆம் ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் மேற்கொண்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். அதில் 100க்கும் மேற்பட்டோர் காயம்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -