பிரசவம் பார்க்க ஆளில்லை – நடு ரோட்டில் குழந்தைப் பெற்றெடுத்த பெண்..!

0

அரசு மருத்துவமனைகள் எங்கும் கொரோனா சிகிச்சைக்காக தீவிரமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. இதனால் மக்கள் தங்கள் தேவைகளுக்காக மருத்துவமனைக்கு செல்வது தடைபட்டுள்ளது. இதனால் பலர் அவஸ்தைக்கு உள்ளாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒரு பெண் நடுரோட்டில் குழந்தை பெற்றிருக்கும் அவலம் நடந்தேறியிருக்கிறது.

தனியார் மருத்துவமனையின் அலட்சியம்

பஞ்சாப் மாநிலம் சண்டிகாரில் உள்ள தர்மகோட் பொது சுகாதார நிலையத்தின் அனைத்து மருத்துவர்களும் கொரோனா பணியில் ஈடுபடுத்தப்படிருக்கும் வேளை, அருகிலுள்ள ஜானேர் என்ற கிராமத்தில் வசித்து வரும் 30 வயது மதிக்கத்தக்க ஜோதி என்ற பெண்ணுக்குப் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

How to deal with pain during labror and delivery

ஆனால், தனியார் மருத்துவர்களும் கூட பிரசவம் பார்க்காமல் புறக்கணித்ததால், ஜோதியின் கணவர் இரண்டு பெண்களை அழைத்து வந்து நடுரோட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளார். இதற்கு இரண்டு காவலர்கள் உதவி செய்துள்ளனர்.

நடுரோட்டில் பிரசவம்

இதுகுறித்து இவரது கணவர் ஹர்மேஷ் தெரிவித்ததாவது, “இரவு 9 மணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. பொது சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றேன். அங்கு யாரும் தயாராக இல்லை என்பதைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனைகளை அணுகினோம். அங்கும் எங்களுக்கு உதவ யாரும் தயாராக இல்லை.

New Motor Vehicle Act: An Ease to 108 Emergency Ambulance Service

செப்டம்பர் மாதம் வரை இந்தியாவில் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் – அமெரிக்க ஆய்வில் தகவல்..!

நாங்கள் 108க்கும் அழைத்தோம். ஆனால், பயனில்லை. அவர்கள் வேறோரு நோயாளியை அழைத்துச் சென்று கொண்டிருந்தனர். இரவு நேரத்தில் ஒரு பெண் வலியால் துடித்துக்கொண்டிருப்பதைக் கண்டு இரு காவலர்கள் அங்கிருந்த மரக்கட்டிலை கொண்டு வந்ததோடு இரு பெண்களையும் அழைத்து வந்தனர். அவர்களால் தான் இந்த பிரசவம் நிகழ்ந்தது” என்று தெரிவித்தார்.

தனியார் மருத்துவமனையில் எத்தனை மருத்துவ வசதிகள் இருந்தாலும் அரசு மருத்துவமனையே சேவையாற்றும் நோக்கில் இருக்க வேண்டிய கட்டாயத்தை இந்த நிகழ்வு நிரூபிக்கிறது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here