‘லியோ’ திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் நடிக்கும் 68 ஆவது படத்தை வெங்கட் பிரபு இயக்க இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. அந்த வகையில், இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருக்கிறார். இது தவிர ‘தளபதி 68’ திரைப்படம் குறித்த மற்ற தகவல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இந்த நிலையில், ‘தளபதி 68’ திரைப்படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது. நடிகர் விஜய் ஏற்கனவே ‘அழகிய தமிழ் மகன்’ மற்றும் ‘கத்தி’, ‘மெர்சல்’ போன்ற திரைப்படங்களில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இந்த படங்கள் அனைத்தும் வெற்றிப்படமாக அமைந்திருந்ததால், ‘தளபதி 68’ மீது எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளது.