மரண மாஸாக வெளியான தலைவர் 169 படத்தின் டைட்டில் – அதிகாரப்பூர்வமாக அறிவித்த Sun pictures!!

0
மரண மாஸாக வெளியான தலைவர் 169 படத்தின் டைட்டில் - அதிகாரப்பூர்வமாக அறிவித்த Sun pictures!!
யப்பா., நம்ம சூப்பர் ஸ்டாரா இது., ஜெயிலர் பட பர்ஸ்ட் லுக்குடன் சன் பிக்சர்ஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாக உள்ள தலைவர் 169 படத்தின் தலைப்பை ஜெயிலர் என, தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதிரடியாக அறிவித்துள்ளது.

அதிரடி அறிவிப்பு:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாக உள்ள திரைப்படம் தலைவர் 169. நடிகர் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள்மோகன், ரம்யா கிருஷ்ணன், ஐஸ்வர்யா ராய்  உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி வந்தது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை, பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ்  தயாரிக்க உள்ளது. இந்த படத்துக்கு, டைட்டில் என்னவாக இருக்கும் என பலரும் பேசி வந்த நிலையில், படத்தின் டைட்டிலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

ரஜினி படத்தில் இணையும் கன்னட சூப்பர் ஸ்டார் - நேரில் சென்று அழைக்கும் நெல்சன்! சூடுபிடிக்கும் தலைவர் 169!!

அதாவது, இந்த படத்திற்கு “ஜெயிலர்” என தலைப்பு வைக்கப்பட்டு, ரத்தத்துடன் கூடிய ஒரு கத்தி போட்டோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை ரசிகர்கள் பலரும் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். விரைவில் இதுகுறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here