TN TET தேர்வு வினா தாளில் குளறுபடி., கிரேஸ் மதிப்பெண் வழங்க தேர்வர்கள் கோரிக்கை!!

0
TN TET தேர்வினா தாளில் குளறும்படி., கிரேஸ் மதிப்பெண் வழங்க தேர்வர்கள் கோரிக்கை!!
TN TET தேர்வு வினா தாளில் குளறுபடி., கிரேஸ் மதிப்பெண் வழங்க தேர்வர்கள் கோரிக்கை!!

TET தேர்வின் 2ம் தாளில், ஒரே தகுதி தேர்வில் ஒரே பாடத்திட்டத்திற்கு தேர்வு எழுதுவதற்கான கேள்வித்தாளில், வேறு வேறு வினாத்தாள் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தேர்வர்கள் கோரிக்கை :

ஆசிரியர் தகுதி தேர்வாணையம் நடத்தும், ஆசிரியர் காலி பணியிடங்களுக்கான தகுதி தேர்வின் இரண்டாம் தாள் மூன்று ஆண்டுகளுக்கு பின் கடந்த பிப்ரவரி 3 முதல் 14 ஆம் தேதி வரை ஆன்லைனில் நடத்தப்பட்டது. முதல் முறையாக டெட் வரலாற்றில் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்பட்டதால், பலதேர்வர்கள் இதற்கு வரவேற்பு தெரிவித்தனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதைத்தொடர்ந்து இந்த தேர்வுக்கான வினாத்தாள் குறித்த குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது, ஒரே தகுதி தேர்வில் ஒரே பாடத்திட்டத்திற்கு தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு வேறு வேறு வினாத்தாள்கள் வழங்கப்பட்டதாகவும், இது தேர்வர்களின் சமநிலையை குறைப்பதாகவும் சொல்லப்பட்டது.

தமிழகத்தில் மருத்துவர் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்து விநியோகம்., சுகாதாரத்துறை கடும் நடவடிக்கை!!!

வினா தாளில் ஒரு சிலருக்கு கேள்விகள் எளிதாகவும், ஒரு சிலருக்கு கடினமாகவும் இருந்ததால், தேர்வர்களின் சம வாய்ப்பை உறுதி செய்ய கிரேஸ் மதிப்பெண் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது மட்டும் அல்லாமல் முதல் நிலை தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்ததாக முதன்மை தேர்வு நடத்தப்படுவதால் தேர்ச்சி மதிப்பெண்ணை 82 இல் இருந்து 75 ஆக குறைக்க வேண்டும் எனவும் கோரிக்கை அளிக்கப்பட்டுள்ளது. இதில் அரசு என்ன முடிவெடுக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here