சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிக்கும் தமன்னா – வெளியான அதிகாரப்பூர்வ தகவல்!!

0
ஐயோ தமன்னா.. உங்களுக்கே இந்த நிலைமையா - மனம் வெறுத்து அவரே அளித்த ஷாக்கிங் புகார்!!

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் நடிப்பில் உருவாக உள்ள ரீமேக் படத்தில் அவருக்கு நாயகியாக நடிக்க நடிகை தமன்னா கமிட்டாகி உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்துள்ளது.

முக்கிய வேடத்தில் தமன்னா:

நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவான படம் வேதாளம். ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இந்தப் படம் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் நடிப்பில் “போலோ சங்கர்” என்ற பெயரில் ரீமேக் செய்ய உள்ளதாக அண்மையில் அறிவித்தனர்.  இந்த படத்தில் அஜித்தின் தங்கையாக லட்சுமி மேனன் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ்  கமிட்டாகியுள்ளார்.

அது போல, நடிகை சுருதி ஹாசன் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை தமன்னா தேர்வாகியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வந்துள்ளது.  ஏற்கனவே, இவர் சீரஞ்சீவியுடன் “சைரா நரசிம்ம ரெட்டி” என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது, இரண்டாவது முறையாக இவர்கள் இணையும் இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற நவம்பர் 11ம் தேதி பூஜையுடன் தொடங்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here